"ஏப்பா, எங்க ஊரப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது.
உங்கள் ஊரின் முக்கிய தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் வரைய உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. கூகுள் மேப்மேக்கரில்.
"கூகுள் மேப்ஸ் நமக்குத் தெரியும் தானே" என்று நினைக்காதீர்கள். விக்கிமேப்பியா, கூகுள் மேப்ஸின் முந்தைய வெளியீடுகளில் இல்லாத அளவிற்குத் துல்லியமாக நாம் நம் ஊர்களை வரைய முடியும்.
இதற்காக வடிவமைக்கப்பட்டதே கூகுள் மேப்மேக்கர் தளம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியே போதுமானது.
மாவட்ட தலைநகரங்களைத் தவிர்த்து சிறு நகரங்கள், கிராமங்களுக்கெல்லாம் நல்ல இணையதள வரைபடங்கள் உள்ளனவா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பக்கத்தில் உள்ள கூகுள் வரைபடத்தில் உடுமலைப்பேட்டையின் (என் ஊர்) பிரதான் நெடுஞ்சாலைகளைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. இப்பொழுது நான் எனது பள்ளியையும், வேறொரு அன்பர் ஊரில் உள்ள திரையரங்கையும் வரைபடத்தில் ஏற்றியுள்ளார். தெருக்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கோயில்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
எப்படி சரியாக இடத்தைக் குறிக்க முடியும்?
இந்த வரைபடத்தில் மீட்டர், கிலோமீட்டர் போன்ற அளவுகோல்கள் உள்ளன. உங்கள் தெரு பிரதான சாலையில் இருந்து 100 மீட்டர் என்பது உங்களுத் தெரியும் தானே!
சரி, தவறாகக் குறித்து விட்டால்?
அதற்கும் வழிவைத்திருக்கிறார்கள் கூகுள் மேப்மேக்கர் நிறுவனத்தார். நீங்கள் வரைந்த / குறித்த இடத்தை மற்றொருவரும் சான்றளித்தாலே (மாடரேஸன்) இறுதியாக்கப்படும். இப்படி பயணர்களிடம் ஒரு சேவையை விரிவாக்கிப்பெறுவதற்குப் பெயரே CROWD SOURCING என்பது. விக்கிப்பீடியாவும் இந்த முறையிலேயே செயல்படுகிறது.
இந்த மேப்மேக்கரை வடிவமைத்தது கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பணியாளர்களே.கீழே உள்ள காணொளியைப் பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.
என்ன தயாரா?
வாங்க கொட்டாம்பட்டி, பாப்பம்பட்டி, கோவில்பாளையம், குத்தாலம், சுங்குவார்சத்திரம், சூளகிரி, அம்மாபேட்டை, குளச்சல்னு நம்ம கிராமங்களையெல்லாம் வரைபடத்தில் ஏற்றுவோம்.
சென்னை போன்ற மாநகர அன்பர்கள் இது ஏதோ கிராமங்களுக்கு மட்டும் தான்னு நினைக்க வேண்டாம். உங்களுக்கு அறிமுகமான திரையரங்கங்கள், காபிக்கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், தெருக்கள், பல்பொருள் அங்காடிகள் அனைத்தையும் கூகுள் மேப்மேக்கரில் ஏற்றுங்கள்.
உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்.
..
13 comments:
நல்ல தகவல் செந்தில்... எனது உரினையும் ஏற்றிட முயற்சிக்கிறேன். நன்றி...
பிரபாகர்.
ரைட்டுங்க...
கொட்டாம்பட்டி ரோட்டுல உள்ள குட்ட கவுண்டர் வீட்டையும் கூகிள் குட்டையில கலக்குவோம் செந்தில்...
நா ரெடி! நீங்க ரெடியா?
எங்க ஊரையே மேப்புல கானும் செந்தில்....இன்னொரு அத்திபட்டியா..?
இஸ்மத் அண்ணே, உங்கள் ஊரிற்குப் பக்கத்தில் உள்ள மாயவரத்தில் இருந்து உங்க ஊர் சாலையை வரையவும், உங்கள் ஊரை குறிக்கவும் அருமையான வாய்ப்பு உங்களுக்கு :)
அருமையான தேவையான தகவல். நன்றி செந்தில்
செந்தில் அருமையான தகவல்!
பயனுள்ள இடுகை அன்பரே...இப்போதே முயற்சிக்கிறேன்...
வாங்க பிரபாகர். முயற்சி செய்யுங்கள் நன்றி.
வாங்க அஷோக். நன்றி
வாங்க கலை. கண்டிப்பா குட்டைல கலக்குவோம். நன்றி
வாங்க பாலாண்ணே. நன்றி
வாங்க குசும்பன். நன்றி
வாங்க பாலாஜி. முயலுங்கள். நன்றி
அருமையான தகவல்கள் ..
உங்களை போன்று எழுத வேண்டும் என்று பொறாமையாக உள்ளது..
அருமை நண்பர் செந்தில்வேலன்
ஊர் கூடி தேரை இழுத்தால் தான் தேர் நகரும், நாமும் மேப் வரைவோம்
நீங்கள் வரைந்த இடங்கள் பள்ளிகள். நான் கொஞ்ச நாளைக்கு முன் வரைந்த இரண்டு இடங்கள். கல்பனா திரையரங்கம் மற்றும் பேருந்து நிலையம். :)
நம்ம ஊரை உலகமே பார்ககும்படி(மேப்பில்) செய்துவிட்டீர்கள் செந்தில். பாராட்டுக்கள்
Post a Comment