Saturday, November 14, 2009

அமீரக தமிழ்ச் சங்க விழா - நெப்போலியன், ராஜா, ஈரோடு மகேஷ் மற்றும் பலர்

அமீரக ( U.A.E) தமிழ் சங்கத்தின் ஓராண்டு முடிவடைந்ததை முன்னிட்டு கலையரங்கம் - 2009 என்ற விழா நேற்று (13.11.2009) நடந்தேறியது. துபாய் கராமாவில் உள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.


மத்திய அமைச்சர் (நடிகர்) நெப்போலியன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க பட்டிமன்றப் பேச்சாளர்கள் திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர், புலவர் இராமலிங்கம், ஈரோடு மகேஷ், கோகுல்நாத் மற்றும் அமீரகக் குழுவினர் கலந்துகொள்வாதாக அறிவித்திருந்தனர்.

வெள்ளிக்கிழமையன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததால் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை!! அரங்கின் உள்ளே செல்லும் வழியெங்கும் கூட்டம் தான். கீழ் தளத்தில் முட்டை போண்டா, உளுந்து வடை, தேநீர் போன்றவற்றின் விற்பனை வெகுவாக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கு மேல்தளத்தில் ( பால்கனி) இருக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆசிஃப்மீரன் அண்ணாச்சி!! நாங்கள் எங்கள் இருக்கையில் அமரும் பொழுது மணி 6:10.

ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்து அரங்கத்தில் கூட்டம் களைகட்டியிருந்தது. அமீரகத்தில் நடப்பதால் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் துவக்கிவிடுவார்கள் என்று அனைவரும் நம்பிவிட்டார்கள் போல.. நாம் என்ன சளைத்தவர்களா? நிகழ்ச்சியைச் சரியாக 6:45க்கு துவக்கி எங்கே சென்றாலும் "நாம் இந்தியர்கள் தான்" என்பதை நிரூபித்தார்கள் விழாக் குழுவினர்.


நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக அரங்கத்தினுள் வந்தமர நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் அமீரக தமிழ் சங்கத்தைச் சேர்ந்த மகளிர் உறுப்பினர். வரவேற்புரையை திரு. சலீம் கான் நிகழ்த்த, வானலை வளர்தமிழ் மன்றத்தைச் சேர்ந்த திரு. காவிரி மைந்தன் கவிதையைப் பாடி முடிக்க கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

"கலக்கப் போவது யாரு" புகழ் ஈரோடு மகேஷ் மேடையேறியவுடன் அரங்கம் சிரிப்பொலியால் நிரம்பியது. மகேஷ், தான் வந்த கதையையும், நிகழ்ச்சி தொகுப்பாளினி தன் பெயரை ஈரோடு ரமேஷ் என்று கூறியதையும் நகைச்சுவையாய்க் கூறியது ரசிக்கும் படி இருந்தது. அடுத்த பத்து நிமிடங்களுக்கு சிரிப்புச் சரவெடிகளைக் கொளுத்தி நிகழ்ச்சியைக் கலக்கினார்.

"என் மனைவி மட்டுமல்ல
அவரது சட்னியும் பத்தினி தான்
ஏனென்றால் சட்னியை நான் மட்டுமே உண்ண முடியும்"
என்று கவிதையென்ற பெயரில் அவர் கூறிய வரிகளுக்கு அரங்கத்தில் பலத்த கைத்தட்டகள்!!

அடுத்து "மானாட மயிலாட" புகழ் கோகுல்நாத் தனது நடனத்தையும், வித்தியாசமான மிமிக்ரி மற்றும் நடிப்பு கலந்த நிகழ்ச்சியை வழங்கினார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர் ஒருவர் "கோகுல் தீபா எங்கே" என்று சத்தமிட "இந்தியாவில் இருக்கிறார்" என்று கூறி சமாளித்தார். "மதுரை வீரன் தானே" பாட்டை மைக்கேல் ஜாக்சனின் பாணியில் ஆடியதற்கு அரங்கமெங்கும் கைத்தட்டல் ஒலித்தது.

இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டியது - பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் இடையில் குழு நடனம் ஆடிய சிறுவ சிறுமியர்களைத்தான்!!
அடடா.. ஏதோ ஒரு பள்ளி ஆண்டு விழாவிற்குள் நுழைந்து விட்ட உணர்வு ஏற்பட்டது அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பொழுது. அத்தனை நேர்த்தியான குழு நடனம். அஞ்சலி அஞ்சலி, அலேக்ரா, மதுரைக்குப் போகாதடி போன்ற பாடல்களுக்கு மூன்று வயது முதல் பத்து வயது மதிக்கத்தக்க குழந்தைகள் ஆடியது மகிழ்ச்சியளித்தது. அவர்களது ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே நணபர் நினைவூட்டுனார், நாளை (இன்று) குழந்தைகள் தினமென்று. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!!


இவர்களுக்குப் பயிற்சியளித்த நடன ஆசிரியர் பாராட்டுக்குரியவர்!!

எங்கெங்கோ இருந்து அமீரகத்திற்கு வந்தாலும் நம் நாட்டு விழாவைப் போலவே விழாவைப் பார்த்தது, அரங்கத்தில் பார்த்த சின்னச் சின்ன திட்டமிடல் கோளாறுகளைக் கூட மறக்கச் செய்தது.

பிறகு, அமீரக தமிழ் சங்கத்தின் நிர்வாகத்தினர் சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் நெப்போலியன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புரை ஆற்ற அழைத்தார்கள்.

மேடையேறிய நெப்போலியன் தமிழைப் பற்றியும், அமீரகத்தைப் பற்றியும், தான் ஏற்றுக் கொண்ட பதவியைப் பற்றியும் கூற ஆரம்பித்தார். பிறகு, தனக்கு நெப்போலியன் என்று பெயர் வருவதற்காக காரணத்தைச் சுவாரஸ்மாய விவரித்தார். குமரேசன் என்ற தன் பெயரை நெப்போலியன் என்று மாற்றிய இயக்குனர் பாரதிராஜாவை நினைவுகூர்ந்தது ரசிக்கும் படியாக இருந்தது.

அவரது சிறப்புரையை முடிக்கும் முன் முத்தாய்ப்பாக மக்களுக்குப் பிடித்த "கிழக்குச் செவக்கையிலே... கீரை .... " பாடலையும், அவருக்குப் பிடித்த "பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம்" பாடலையும் பாடி அசத்தினார்.

இதற்கு முன்பாக ஈடிஏ நிறுவன இயக்குனர் திரு சையத்.எம்.சலாலுதீன் காகா, திரு ரமேஷ், திரு குமார் ஆகியோரும் உரையாற்றினார்கள். இதற்கடுத்து பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்!!

திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் புலவர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்கும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் பொழுது 10:00 மணி ஆகியிருந்தது.

என்னுடன் வந்திருந்த நண்பர் மற்றும் பதிவர் சென்ஷிக்கு சனிக்கிழமை அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் நிகழ்ச்சியின் பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பினோம்.

பட்டிமன்றத்தைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் மனதில் இருந்தாலும், ஒரு சேர நம் மக்களைப் பார்த்த மன நிறைவும், தமிழை மட்டுமே அரங்கம் எங்கும் கேட்ட மகிழ்ச்சியும் மனதில் நிறைந்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடன் நம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற தைரியமும் அதிகரித்தது.

இனிமையான மாலைப் பொழுதை அளித்த அமீரக (U.A.E) தமிழ் சங்கத்தினர்க்கு நன்றியும், ஓராண்டை முடித்ததற்கு வாழ்த்துகளும்!!
...

14 comments:

ஜோதிஜி said...

கவிதையென்ற பெயரில் அவர் கூறிய வரிகளுக்கு (?)

நவீன விஞ்ஞான அரங்க அமைப்பு

எங்கெங்கோ இருந்து அமீரகத்திற்கு வந்தாலும் நம் நாட்டு விழாவைப் போலவே

இந்த அனுபவம் மனதில் நிலைத்து நிற்கும். உங்களுக்கு மட்டும் அல்ல. வாசிக்கும் அணைவருக்கும்.

நடை மெருகேறிக்கொண்டே போகின்றது செந்தில்.

ஹாய் அரும்பாவூர் said...

nalla seithi dubai have tamil sangam i think only malayali

கலையரசன் said...

அவ்வளவு நேரமா ஆகிடுச்சு?

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
மிக நல்ல கட்டுரை, நிகழ்ச்சியை நேரில் பார்த்தார் போல் அமைந்தது,பகிர்வுக்கு நன்றி.
ஓட்டுக்கள் போட்டாச்சு

Prathap Kumar S. said...

செந்தில், தெரிந்திருந்தா நானும் வந்திருப்பேன்... தெரியாமப் போச்சு.
உங்கள் பதிவைபடித்ததும் அந்த குறை தீர்ந்தப்போச்சு..நன்றி

கீழை ராஸா said...

வர்ணனை அருமை...ஓட்டும் போட்டாச்சு

☀நான் ஆதவன்☀ said...

அருமையான தொகுப்பு செந்தில். பட்டிமன்றம் பார்க்காமல் வந்தீர்களா? :( வேறு வேலை இருந்ததால் என்னால் வரமுடியவில்லை.

ஹுஸைனம்மா said...

செந்தில்,

நீங்களும் எழுதியிருக்கீங்களா? நானும் எழுதியிருக்கேனே, பாருங்களேன்.

அவர் ஏன் அதைப் பாடினார்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜோதிஜி.. நன்றி..

வாங்க அரும்பவுர், தமிழர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். நன்றி

வாங்க கலை.. நன்றி..

வாங்க பழமையண்ணே. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன். நன்றி.

வாங்க நாஞ்சில் பிரதாப். நன்றி.

வாங்க கீழை ராஸா. நன்றி.

ரவி said...

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்..!!!!!!!

ஈரோடு கதிர் said...

அங்கேயும் நம்மாட்களோட நேர மேலான்மை இப்படியே இருக்கிறதே

vasu balaji said...

நல்ல தொகுப்பு. வாழ்த்துகள்

Related Posts with Thumbnails