Sunday, November 15, 2009

அயல்நாடுகளில் அம்மா அப்பா..


சென்னை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் / சென்றவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்திருக்க முடியும். வேலை, தொழில், சுற்றுலா போன்ற காரணங்களுக்காகச் செல்லும் பயணிகள் அளவிற்கு தம் மக்களைப் பார்க்கச் செல்லும் பெற்றோர்களையும் அதிகமாக பார்க்க முடியும். தம் மக்களைப் பார்க்கச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியும், அயல்நாட்டுப் பயணம் குறித்த பயமும் ஒரு சேர அவர்களது முகத்தில் பார்க்க இயலும்.

முன்பெல்லாம் அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் நம்மவர்கள் பணியில் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என உலகெங்கும் நம் இளைஞர்கள் பணியில் இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் அங்கேயே தங்கிவிட நேர்கையில், ஓராண்டிற்கோ அல்லது இரு ஆண்டுகளுக்கோ ஒரு முறை இந்தியாவிற்கு வந்து செல்கிறார்கள். பெற்றோரை நீண்ட நாட்களாகப் பார்க்க இயலாமல் இருப்பவர்கள் செய்யும் மாற்று ஏற்பாடு பெற்றோர்களைத் தாங்கள் இருக்குமிடத்திற்கு அழைப்பது..

பெற்றோரும் தம் மக்களையும், பேரக்குழந்தைகளையும் பார்க்கும் ஆர்வத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயாராகுகிறார்கள்!! ஆனால் அவர்களது வெளிநாட்டுப் பயணம் மகிழ்ச்சியுடையதாக இருக்கிறதா?

வெளிநாடுகள் என்றால் நமக்கு நினைவிற்கு வருவன வானுயர்ந்த கட்டடங்களும், தூய்மையான சாலைகளும், பசுமையான புல்வெளிகளும், ஆடம்பரமான அங்காடிகளும் தான்!! ஆனால் அவை எந்த அளவிற்கு முதியவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன?

தன் பேத்தியையோ பேரனையோ பார்த்தவுடன் அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிடுவது என்னவோ உண்மை தான்!! அதைத் தவிர்த்துப் பார்த்தால் அவர்களது வெளிநாட்டு வாசம் ஓரிரு வாரங்களிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது.

கட்டடக் காடுகளில் அடைப்பட்டுக் கிடப்பதும், சுத்தமான வெளிக்காற்றை சுவாசிக்க முடியாமல் தவிப்பதும் அவர்களுக்கு கிடைக்கும் முதல் அதிர்ச்சி. தம் ஊரில் காற்றாட வெளியில் நடக்கவும், நண்பர்களுடன் அளவளாவும் முடிவது போல் வெளிநாடுகளில் முடியாமல் போவது அவர்களுக்கு மேலும் அயற்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நன்றாக உலாவ இடமிருப்பது கொஞ்சம் நல்ல விசயம். அதுவும் குளிர்காலம் என்றால் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும்.

எப்பொழுதும் காற்றோட்டமாக இருந்து பழக்கப் பட்டவர்களுக்கு, குளிரூட்டப் பட்ட அறையிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவது உடல் ஆரோக்கியம் கெடுவதற்கான காரணமாகிவிடுகிறது. குளிரூட்டப் பட்ட அறைகளில் இருப்பதால் தண்ணிர் எடுத்துக் கொள்ளும் அளவும் குறைந்து விடுகிறது. இதனால் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் முதியோர்களுக்கே உரிய உடல் உபாதைகள் என அவதிக்குள்ளாகிறார்கள். ஏதாவது நார்சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டு மலச்சிக்கல் போன்றவற்றைச் சரி செய்வதை அவர்களுக்கு இருக்கும் சர்க்கரை நோய் தடுத்து விடுகிறது.

பெரும்பாலான நேரத்தை நண்பர்களுடன் செலவிட்டுப் பழகியவர்களுக்கு பேச்சுத்துணை இல்லாததே மனதளவில் தளர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. அருகில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் அலுவலக நண்பர்களும் இருந்தாலும் அவர்களது நண்பர்கள் போல் இருக்காது தானே!!

வெளிநாடுகளில் வேலை, இந்திய மதிப்பிற்கு நல்ல சம்பளம், மற்றும் இன்னபிற காரணங்கள் நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் பெற்றோர்களுக்கும் வெளிநாட்டு வாழ்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்துமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!!

நம் சுயநலத்திற்காக நம்மை வளர்த்து ஆளாக்கியவர்களின் உடல்நலனைக் கெடுப்பது சரியா?

நம் பெற்றோர் படும் துன்பத்தை நம்மிடம் பகிராமல் போவது கூட இதைக் கூறினால் நாம் வருத்தப்படுவோமோ என்பதாகத் தான் இருக்கும்!!

வெளிநாடுகளுக்கு அழைக்கும் முன் சிலவற்றை செய்வது நல்லது :

* நம் பெற்றோர் வெளிநாடுகளுக்குக் கிளம்பும் முன் உடலை முழுப் பரிசோதனை செய்துவிட வேண்டும். அண்மையில் என் அலுவலக நண்பர் அவரது பெற்றோரை இங்கே அழைத்து வந்தார். இங்கே வந்த பிறகு உடல்நலம் குன்றி ஓரிரு வாரங்களில் திரும்பும் படி ஆனது.

* மருந்துகள் :- நம் நாட்டில் பயன்படுத்தும் மருந்து வகைகள் வெளிநாடுகளில் கிடைக்கும் என்று கூற முடியாது. ஆகவே, எத்தனை மாதங்கள் வெளிநாடுகளில் தங்கப் போகிறார்களோ அத்தனை நாட்களுக்குத் தேவையான மருந்து வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நம் ஊரில் கிடைக்கும் உணவு வகைகள் நாம் இருக்கும் ஊரில் கிடைக்கின்றனவா என்று உறுதி செய்துகொள்வது நல்லது. நமக்கு வேண்டுமானால் பீசாவும், பர்கரும், வறுத்த கோழியும் பிடிக்கலாம். ஆனால் நம் பெற்றோர்களுக்கு அவை பிடிக்கும் என்று எண்ண முடியாது.

* பொழுது போக்கிற்குத் தேவையான புத்தகங்களை நம் நாட்டிலிருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

* நாம் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் பூங்காக்களோ, மைதானங்களோ இருந்தால் பரவாயில்லை. காலாற நடப்பதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வசதியாக இருக்கும்.

இவை யாவும் நம் பெற்றோர்கள் வெளிநாடுகளில் ஓரளவு சமாளிப்பதற்கான வழிமுறைகளே என்பதை நினைவில் கொள்க!!

..

25 comments:

நாகா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் செந்தில்..!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் செந்தில்! இந்த வாரம் முழுக்க உங்க வழக்கமான, அட்டகாசமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

கிளியனூர் இஸ்மத் said...

செந்தில்...தமிழ்மணத்தில் இந்த வார சூப்பர் ஸ்டாராக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.....
உங்களின் கட்டுரை அருமை.....

ஈரோடு கதிர் said...

நட்சத்திரத்தின் முதல் இடுகையே அட்டகாசம்...

வாழ்த்துகள் செந்தில்

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் மாம்ஸ் :)

ரோஸ்விக் said...

பதிவு அருமை. கலக்குங்க நண்பா! நட்ச்சத்திரப் பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்!
நல்ல இடுகை..நல்லசிந்தனை!

parameswary namebley said...

நல்லதொரு பகிர்வு.. இதே மாதிரி சூழ்நிலையில் பலர் சிக்கி தவிப்பதை கண்டிருக்கிறேன்..
முக்கியமாக..உடல் நிலை பாத்திப்புனால்.

ஜீவன்பென்னி said...

வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

அது ஒரு கனாக் காலம் said...

நட்சத்திர வாழ்த்துகள்...AND ITS A VERY GOOD POST AS USUAL.

vasu balaji said...

நட்சத்திரப் பதிவில் அருமையான யோசனைகள். அசத்தல் செந்தில்.

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தல...

தேவையான பதிவு ;))

மாதேவி said...

நல்ல பதிவு.நட்சத்திரவாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

வாழ்த்துகள் செந்தில்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நாகா. நன்றி.

வாங்க ஆதவன் நன்றி.

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி

வாங்க சென்ஷி. நன்றி.

வாங்க ரோஸ்விக். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சந்தனமுல்லை.நன்றி.

வாங்க பரமேஸ்வரி. நன்றி.

வாங்க பிரதீப். நன்றி.

வாங்க ஜீவன்பென்னி. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சுந்தர் சார். நன்றி.

வாங்க கோபிநாத். நன்றி.

வாங்க மாதேவி. நன்றி.

வாங்க பிரதாப். நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்...

பகிர்வின் கருத்துக்கள் நிஜம்..கடைபிடிப்போமே...

Ashok D said...

எப்பவுமே தேவையான பதிவை மக்களுக்கு கொடுத்து உதவுகிறீர்கள்.

அதான் தலைவா நானெல்லாம் உள்ளூர்லயே ஒரு கடை தொறந்து நல்ல படியா வயித்த கழுவின்னுகீறோம். ஆனா ஆத்தா மட்டும் எப்பவும் வையும் ‘அவன் 50 ஆயிரம் சம்பாதிக்கறான், ஒரு லட்சம் மாசம் சம்பாதிக்றான்’னு சொல்லி புலம்பும். சில சமயம் tensionnaa இருந்தாலும் பல சமயம் நம்ம புன்னகைபூக்கறதோட சரி.

gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துகள்!

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் வேலன்

அருமையான இடுகை - அயலகம் செல்பவர்களுக்காக - அவர்களை அழைப்பவர்களுக்காக - எழுதப்பட்ட இடுகை - முன்னெசரிக்கை வேண்டும்

நன்று நன்று நல்வாழ்த்த்துகள்

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு. இன்று தான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். இந்த பதிவு எனக்கு மிக பிடித்திருந்தது.

யூத் விகடனில் உங்கள் பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன். எனது படைப்பும் இந்த வாரம் (கட்டுரை/ கவிதை) வந்துள்ளது. முடிந்தால் வாசிக்கவும்
கட்டுரை:http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp
கவிதை : http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp

நன்றி
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

Muruganandan M.K. said...

இவ்வார நட்சத்திரப் பதிவாளராக கலக்க இருக்கும் செந்தில், உங்களுக்கு எனது வாழ்த்துக்க்ள்.

ஹேமா said...

நல்ல பதிவு.தேவையானதும்கூட.வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails