Wednesday, November 18, 2009

நாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை..


காலை 10 மணிக்குப் பாட்டுப்போட்டி. பள்ளி ஆண்டு விழாவிற்காக குழுவாகப் பாடும் போட்டி இது( குரூப் சாங்)!! நாங்க பாடுனதக் கேட்டு கழுதை கூட தெறிச்சடிச்சு ஓடியிருக்கு.


எங்களுக்குப் பெரிதா சங்கீத ஞானமோ பயிற்சியோ இல்லையென்றாலும், இரண்டு வருடத்திற்கு முன்பு பெற்ற அவமானத்தைத் துடைக்கவே இந்த முறை கலந்து கொள்கிறோம். நாங்கள் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. பள்ளியே எங்களைப் பார்த்து சிரித்ததை நினைத்தால்...


********************

அன்று காலையில் தான் ஆண்டு விழாவினைப் பற்றியும், நடக்கவிருக்கும் போட்டிகளைப்பற்றியும் அறிவித்திருந்தார்கள். உணவு வேளை மணியடித்ததும் வழக்கமாக அமரும் வேப்பமர நிழலிற்கு ஓடினோம். கொஞ்சம் தாமதமானால் போதும் இடம் போய் விடும். அந்த வேப்பமரத்தைத் தாண்டித் தான் பலரும் செல்வார்கள் என்பதால் அந்த இடத்திற்கு அடிதடி. சிலுசிலுன்னு வேப்பமரக்காற்று அடிக்க அரட்டை ஆரம்பித்தது..

"வேலா.. ஆன்னுயல் டே போட்டிக்கு, பேர் கொடுக்கறதுக்கு இன்னிக்குத் தான் கடைசி நாள்" ஆரம்பித்தான் சரவணன்

"அதுக்கு என்னிப்போ.. நமக்குத் தான் ஒன்னும் வராதாச்சே" கெக்கெக்கே என்று சிரித்தான் மணி.

"டேய்.. ஒவ்வொரு வருஷமும் நம்ம கிளாஸ் பொண்ணுக தான் பாட்டுப் போட்டில ஜெயிக்கறாங்க. நாம ஜெயிக்காட்டிப் போகுது.. குறைஞ்சது கலந்துக்கலாமே. கிளாஸ் மிஸ்ஸு வேற இண்டர்வெல்ல இதப் பத்தி கேட்டுட்டாங்க" என்றான் சரவணன்.

சரவணன் எங்கள் வகுப்பின் லீடர். நன்றாகப் படிப்பான். பொறுப்பான மாணவன். எங்கள் வகுப்பாசிரியைக்கு அவரது வகுப்பிற்கு நிறைய பரிசுகள் வாங்க வேண்டுமென்ற ஆசையால் சரவணனிடம் கேட்டிருக்கிறார்.

"சரி.. நீ ரொம்ப ஆசைப்படற. எப்படா காம்படிஸன்?" என்றேன்

"நாளைக்கு.."

"கிழிஞ்சுது போ" மீண்டும் மணி "கெக்கெக்கே" என்றான்.

"டேய், ஒரு நாள் தான் இருக்கு! எப்படிடா? பொண்ணுங்க கலந்துக்கறாங்கன்னா அவங்க முன்னாடியே பிராக்டீஸ் பண்ணிருப்பாங்க.." என்றான் தாஸ்.

"சரி, நம்ம ஒன்னு பண்ணுவோம். இன்னிக்கு சாயங்காலம் தாஸ் வீட்டுல போயி பிராக்டீஸ் பண்ணலாம்" என்றான் சரவணன்.

"சரி எந்தப் பாட்டடா குரூப் ஸாங்கா பாடுறது?"

"இன்னும் நாலு பீரியட் இருக்கு.. உங்களுக்கு என்னென்ன பாட்டு தோணுதோ எழுதி வையிங்க.. சாயங்காலம் செலக்ட் பண்ணிடுவோம். நான் இப்போ போய் நம்ம பேரையும் கொடுத்துடறேன்" என்றான் சரவணன்

"இது ஒன்னும் நடக்கற மாதிரி தெரியல" என்றான் ரிச்சர்ட்.


*****

அன்று மாலை நான், சரவணன், தாஸ், மணி, அமிர்தராஜ், கமல்,பாபு, சிராஜ் என அனைவரும் தாஸ் வீட்டு மொட்டை மாடியில் ஆஜர். மொட்டை மாடிக்கு சென்றவுடன் பக்கத்து வீட்டில் டியூஸனுக்கு வரும் பெண்களைப் பார்ப்பதிலேயே அனைவரது கவனமும்..


"டேய்.. போதும்டா.. வந்த வேலையக் கவனிப்போம்" என்றான் தாஸ். வீட்டில் யாராவது புகார் செய்துவிட்டால் என்னாவதென்ற பயம் அவனுக்கு.

"இதுக்குத் தானடா வந்தோம்" என்று வம்பிழுத்தான் கமல்..

"சரி..என்ன பாட்டுடா பாடலாம்.. " என்றேன்.

"ரோஜால இருந்து 'தமிழா தமிழா' பாடலாம்" என்றான் தாஸ்

"மறுபடியும்ல இருந்து 'நலம் வாழ் பாடலாம்' " - கமல்

" தலைவர் படத்துல இருந்து ஒரு பாட்டு பாடலாம்" - பாபு.

" 'வந்தேண்டா பால்காரன்'னு குருப் சாங் பாட சொல்றீயா" - அமிர்.

" இங்க பாரு.. வண்டிச்சோலை சின்ராசு படத்துல இருந்து 'செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே' பாட்டுப் பாடுனா என்ன" என்றான் சரவணன்.

" நல்லத்தாண்டா இருக்கு"

"டேய்.. பொண்ணுகள நக்கல் பண்ற மாதிரி ஆயிடப்போகுதுடா" என்றான் தாஸ்

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.."

"சரி.. லீடர் சொல்லியாச்சு அப்பீல் ஏது.."
...



பிறகு கேசட்டில் இருந்து பாடலை எழுதி வைத்துப் பாடிப் பார்த்தோம். எங்கள் கரகரப்பான குரலிற்கு நன்றாக பொருந்தியது போலவும் உணர்ந்தோம். சில மணி நேரம் பயிற்சி செய்தோம். யார் யார் எங்கே நிற்பது என்பது வரை பலதையும் கூடி முடிவு செய்து விட்டு இரவு அவரவர் வீட்டிற்குச் சென்றோம். அந்த நேரத்தில் அந்தப் பாடல் நன்றாக பிரபலமாகியிருந்தது... பாடல் வரிகள்



செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

நெசவு செய்யும் திருநாட்டில்,

நீச்சல் உடையில் அலையிறியே..

கணவன் மட்டும் காணும் அழகை,

கடைகள் போட்டுக் காட்டுறியே.. (செந்தமிழ்நாட்டுத்..)

எலந்தைக காட்டில் பொறந்தவ தானே,

லண்டன் மாடல் நடையெதுக்கு?

காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது,

காத்துவாங்கும் உடையெதுக்கு?

உடம்புவேர்க்கும் உஷ்ணநாட்டில்,

உரசிப் பேசும் ஸ்டைலெதுக்கு?

டக்கர் குங்குமம் மணக்கும்நாட்டில்,

ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே..

நெசவு செய்யும் திருநாட்டில்,

நீச்சல் உடையில் அலையிறியே..

கற்பு என்பது பிற்போக்கு இல்ல,

கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்!

காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,

கனகபூக்கள் அணிஞ்சிக்கணும்!

பழமை வேறு, பழசு வேறு,

வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!

புரட்சியெங்கே, மலர்ச்சி எங்கே,

புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்! (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

சேலை உடுத்தத் தயங்குறியே.. (4 முறை)

*********

எங்களுக்கான போட்டி நேரம் காலை 11 மணி. கீழ் வகுப்புகளுக்கான போட்டிகளை முதலில் நடத்த ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் நாங்கள் தனியே மரத்தடியில் மீண்டும் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். போட்டி நடைபெற்றிருந்த இடத்திலிருந்து பாலா ஓடி வந்தான்...

"என்னடா.. போட்டி எப்படிடா நடக்குது?"

"எட்டாவது பசங்க பாடுனத பாதில நிறுத்தீட்டாங்கடா.." என்றான் பாலா.

"ஏனாம்"

" அவங்க பாடுன பாட்டுல கேர்ள்ஸ கிண்டல் பண்ற மாதிரி லைன்ஸ் இருந்ததாம்" என்றான்.

"கிழிஞ்சுது போ.." இஃகிஃகி என்றான் மணி

"நம்ம பாட்டையும் நிறுத்திடுவாங்களோ? இப்போ என்னடா பண்ண?"

"நாங்க பாடலன்னு இப்ப சொன்னா அசிங்கமா இருக்கும்"


கொஞ்ச நேரம் யோசித்த தாஸ்.. "நம்ம பாட்டுல ஒரு ரெண்டு வரிய சென்சார் பண்ணிடுவோம்"

"சென்சாரா.. ஹாஹாஹா" என்றான் பாலா..

"ஆமாண்டா.. இங்க பாரு 'கணவன் மட்டும்'ல இருந்து.. 'கடைகள் போட்டுக் காட்டுறியே' வரைக்கும் கட் பண்ணிடுவோம்"

"சரி.." என அனைவரும் பாட்டுப் போட்டி நடக்கும் இடத்திற்குக் கிளம்பினோம்.


**********

முதலில் எங்கள் வகுப்புப் பெண்கள் "யமுனை ஆற்றிலே.." பாடலைப் பாடினார்கள். எங்கள் வகுப்புப் பெண்களில் பலருக்கு நல்ல குரல்வளம். அழகாகப் பாடினார்கள்.

அடுத்து நாங்கள்.. முதல் முறையாக அனைவரும் பாடுவதற்காக மேடை ஏறினோம்.

"ரெடி ஸ்டார்ட்" என மணியடித்தார் நந்தினி மிஸ்.

"செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. நெசவு செய்யும் திருநாட்டில், நீச்சல் உடையில் அலையிறியே.." வரை நன்றாகச் சென்றது.


அடுத்த வரியை எங்களில் இருவர் துண்டிக்க, இருவர் பாட.. முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்த விட்டனர். அதற்குப் பிறகு நாங்கள் என்ன பாடினோம் என்று எங்களுக்கே தெரியாது. மிகுந்த அவமானமாகிப் போனது.


"உங்களுக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை" என்று நண்பர்கள், அண்ணன் மார்கள் அனைவருக்கும் ஒரே சிரிப்புத்தான்.

********************

பள்ளியே எங்களைப் பார்த்து சிரித்ததற்காகவே, இந்த முறை நன்றாகப் பாட வேண்டும் என்று சபதமிட்டிருக்கிறோம்(??). நல்ல பாடலையும் தேர்ந்தெடுத்து நான்கைந்து நாட்களாகப் பயிற்சியும் செய்திருந்தோம். எங்க அனைவருக்குமே கட்டை குரல் தான். இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த பாடலைத் தான் நாங்கள் நம்பியிருக்கிறோம்.


கொஞ்சம் குறைவாகக் கரகரப்புக் குரலை உடையவர்கள் பாடலையும், அதிக கரகரப்புடையவர்கள் "ஹம்மிங்" மட்டுமே செய்வதென முடிவு செய்திருந்தோம்.


இந்த முறையும் எங்கள் வகுப்புப் பெண்களையே முதலில் பாட அழைத்தார்கள். அவர்கள், தில்வால துல்ஹனியா லேஜாயேங்கேவில் இருந்து "கர் ஆஜா பர்தேசி" என்ற பாடலைப் பாடினார்கள். மிகவும் சிறப்பாகவே அமைந்தது. எங்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் என்ன பாடினார்கள் புரியவில்லை. ஆனால் பலரும் கைதட்டியதைப் பார்த்தால் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.


எங்கள் பெயரைக் கூறும் பொழுதே அனைவரும் சிரிப்பது கேட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் மேடை ஏறிப் பாடத் தயாரானோம். பாடுமாறு மணியடிக்க யாரையும் பார்க்காமல் "சிறைச்சாலை" படத்தின் பாடலைப் பாட ஆரம்பித்தோம்...



இது தாய் பிறந்த தேசம்

நம் தந்தை ஆண்ட தேசம்

இது நாம் வணங்கும் தேசம்

உயிர் நாடி இந்த தேசம்

மண் பெரிதா உயிர் பெரிதா

பதில் தரவா இப்போதே

வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம

(வந்தே மாதரம்…)


வீரத்தை குண்டுகள் துளைக்காது

வீரனை சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது

இழந்த உயிர்களோ கணக்கில்லை

இருமி சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரி நரம்பிலே கொடியேற்று

நிலத்தடியில் புதைந்திருக்கும்

பினங்களுக்கும் மனம் துடிக்கும்

(வந்தே மாதரம்) ….


தாயோ பத்து மாசம் தான்

அதிகம் சுமந்தது தேசம் தான்

உயிரும் உடலும் யார் தந்தார்

உணர்ந்து பார்த்தால் தேசம் தான்

இந்த புழுதிதான் உடலாச்சு

இந்த காற்று தான் உயிர் மூச்சு

இன்று இரண்டுமே பரிப்போச்சு

இன்னும் என்னடா வெரும் பேச்சு

கை விலங்கை உடைத்திடடா

எரிமலையே எழுந்திடடா

(வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்) ….

பாடலைப் பாட ஆரம்பித்தவுடன் எங்களுக்கு நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் மனத்திரையில் ஓட ஆரம்பித்தது. உணர்ச்சியுடன் பாட எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் கண்ணிர் துளிகள்!!


பாடலைப் பாடி முடித்த எங்களாலேயே நம்ப முடியவில்லை. அப்படி ஒரு கைத்தட்டல். பிறகு இன்னும் இரண்டு குழுவினர் கலந்து கொண்டனர்.நாங்கள் பாடியதை விடப் பலரும் நன்றாகப் பாடியிருந்ததால் நாங்கள் முதல் பரிசெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இந்த முறை கைத்தட்டல் கிடைத்ததே பெரிதாகத் தோன்றியது. போட்டியின் முடிவைக் கேட்ட எங்களுக்கு அதிர்ச்சி!! எங்களுக்கே முதல் பரிசு!!


"என்னடா நம்ம அவ்வளவு நல்லாவா பாடினோம்?" என்று சரவணன் கேட்க..


"எஸ்.பி.பி.யும் மனோவும் சேர்ந்து பாடீட்டாங்க..இவனுக வேற.... பாட்டு வரிகளப் பாருங்கடா.." என்று சிரித்தான் மணி.


மீண்டுமொரு முறை பாடல்வரிகளைப் படித்துப் பாருங்கள்.. இந்தப் பாடலை யார் பாடியிருந்தாலும் பரிசு வாங்கியிருப்பார்கள். இதை விட உணர்ச்சிகரமாக விடுதலைப் போராட்டத்தைப் பாடலாக்க முடியுமா?

நாங்க போட்டியில் வெற்றி பெற ( சூப்பர் சிங்கர்ஸ் ஆக ) உதவிய இளையராஜாவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும் நன்றிகள்!!

..

.

14 comments:

vasu balaji said...

மணிக்குசும்பு அபாரம். அந்த வயசு செந்தில பார்த்தா மாதிரி இருக்கு. அபாரம்.

Anonymous said...

நல்லா இருக்குங்க இந்தப்பதிவு. நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hi excellent song.Congrats on getting d prize

பிரபாகர் said...

பழைய நினைவுகளை கிளற வெச்சிட்டீங்க. நானும் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை இடுகையாய் எழுதுகிறேன்...

ரொம்ப நல்லாருக்குங்க.

பிரபாகர்.

சென்ஷி said...

//வீரத்தை குண்டுகள் துளைக்காது

வீரனை சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது//


அறிவுமதி - மிகச் சிறந்த கவிஞர்/மனிதர். அவரது வரிகள் வெல்லாது போனால்தான் ஆச்சரியம்! பகிர்விற்கு நன்றி செந்தில்

எம்.எம்.அப்துல்லா said...

//நாங்க போட்டியில் வெற்ற பெற ( சூப்பர் சிங்கர்ஸ் ஆக ) உதவிய இளையராஜாவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும் நன்றிகள்!! //

சென்னைக்கு வர்றப்ப சொல்லுங்க. ரெண்டு பேர்கிட்டயும் நேர்லயே கூட்டிட்டுப்போறேன். அவங்கக்கிட்ட நேராவா நன்றி சொல்லுங்க

:)

கலையரசன் said...

//வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது//

// தாயோ பத்து மாசம் தான்
அதிகம் சுமந்தது தேசம் தான் //

படிக்கும்போது எனக்குள்ள பத்து ஆட்கள் உள்ளிருப்பது போல் ஒர் உணர்வு! எனக்கு பிடித்த இடுகைகளில் முதல் மூன்றில் உங்களுடைய இந்த இடுகையும் அடக்கம்!!

☀நான் ஆதவன்☀ said...

அட!!!! இப்படி தெரிஞ்சிருந்தா டூர்ல உங்க பாட்டை தனியா கேட்டிருக்கலாமே :)

அது ஒரு கனாக் காலம் said...

செந்தில் , அருமையான பதிவு .... அது என்ன மாயமோ , வகுப்பில் எப்போதும் பெண்கள் நன்றாக பாடுவார்கள் , பையன்கள் எப்போதும் சொதப்பிடுவாங்க

கோபிநாத் said...

தல..அப்படியே அந்த பாட்டையும் இணைக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ;)

sultangulam@blogspot.com said...

நல்ல இடுகை.
போன வருடம் தோற்றதை நினைத்து அழுது விட்டு வீரத்தை நினைத்து கண்ணீர் விட்டதாக.... :)
ஒரு வேளை நீங்கள் கண்ணீர் விட்டதை பார்த்து விட்டு பரிதாபப் பட்டு அல்லது வீரத்தில் கண்ணீர் வருவதாக நினைத்து பரிசளித்து விட்டார்களோ! :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே. நன்றி.

வாங்க சின்ன அம்மிணி. நன்றி.

அனானி நன்பரின் வருகைக்கு நன்றி.

வாங்க பிரபாகர்.. நீங்களும் எழுதுங்க.. நன்றி.

வாங்க சென்ஷி. உண்மைதாங்க. அறிவுமதி அருமையான கவிஞர்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க எம்.எம்.அப்துல்லா. வருகைக்கும் அன்பிற்கும் நன்றி.

வாங்க கலை. நன்றி.

வாங்க ஆதவன். நன்றி.

வாங்க சுந்தர் சார். ஆமாங்க பெண்கள் இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.

வாங்க கோபி. காணொளியைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

Prathap Kumar S. said...

இதப்படிச்சதும் என்னோட பள்ளியில் நடந்த ஆண்டு விழா நினைவுக்க வந்துடுச்சு... நன்றி செந்தில்

Related Posts with Thumbnails