இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்களுள், எத்தனை பேருக்கு தமிழைப் பயன்படுத்தத் தெரியும்?
மின்னஞ்சல் அனுப்புதல் (Email),பேச்சாடல் (Chats) , குழுவாடல் (Groups) போன்ற அன்றாட தேவைகளுக்குப் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆங்கிலத்தையே!! இதில் பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர்கள், பதிவர்கள் போன்றோரை விதிவிலக்கானர்வர்கள் எனலாம்!! தாய்மொழியில் பெற்றோருடனும், நண்பர்களுடனும் பேச்சாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! மேலும், குறைந்த அளவினர் மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தி வந்தால் இணையத் தமிழை எப்படி வளர்ப்பது? நமக்குத் தெரிந்தவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்தால் தானே நல்லது!!
அந்த நோக்கத்துடன் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், துபாய் நகரில், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நேற்று (20.11.09) மாலை 6மணி முதல் 9 மணி வரை நடந்தது. குறுகிய கால அவகாசத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், பயிலரங்கத்தில் 45 பேர் கலந்து கொண்டனர். 23, 22 என்று இரண்டு குழுவாகப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
நேற்று நடந்த இந்த பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.
பெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் (Unicode) வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அபுல்கலாம் ஆசாத் எடுத்துரைத்தார். இதில் இவர் ASCII அமைப்பைப் பற்றியும், எழுத்திருக் கட்டமைப் பற்றியும் தேர்ந்த கணினி வல்லனுரைப் போல விளக்கினார். இவர் கூறிய பல தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
கணினிப் பயன்பாட்டில் தமிழின் வளர்ச்சி என்ற தலைப்பில் கணினியில் தமிழ் எவ்வாறு பரவலாக உபயோகிக்கப்படலாம் என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக விளக்கம் தந்தார் அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவர் ஆசிப் மீரான். ASCIIல் ஆரம்பித்து TSCII, TAB TAM, Unicode வரை நடந்தேறிய நிகழ்வுகளைக் கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது.
பிறகு, அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் வெளியிடப்பட்டது. இவற்றை அமைப்பின் நிறுவன உறுப்பினர் காமராஜன் வெளியிட அமைப்பின் பொருளாளர் நஜிமுதீன் பெற்றுக் கொண்டார்.
தமிழ் மென்பொருளை கணினியில் எவ்வாறு நிறுவுவது என்பதைப் பற்றிய விரிவான செயல்முறை விளக்கத்தை அமீரகத் தமிழ் மன்றத்தின் இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வழங்கினார். ஏற்பாடு செய்திருந்த மடிக்கணினிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுவதில் ஜெஸிலா, "குசும்பன்" சரவணன் ஆகிய இருவரும் உதவினர். "தமிழை உள்ளீடு செய்த பொழுது" பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.
வலைப்பூக்கள் குறித்த அறிமுகம், வலைப்பூவைத் துவங்குவது மற்றும் திரட்டிகளில் இணைப்பது குறித்த விளக்கத்தையும், செய்தியோடைகள் குறித்தும் அடியேன் எடுத்துரைத்தேன். இந்நிகழ்வின் பொழுது வலைப்பதிவுகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும், கருத்துரிமை பற்றியும் பல கேள்விகள் வந்தன.
ஃபயர்ஃபாக்ஸ் உலவி மூலமாகத் தமிழில் நேரடியாகத் தமிழில் எழுதுவது, எழுத்துரு மாற்றிகள் போன்ற பிற சேவைகளைக் குறித்து ஆசிப் மீரான் விளக்கவுரை வழங்கினார்.
கலந்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் கணினித் துறையைச் சாராதோர் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் பல நாளாக தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கான அறிமுகம் இன்றே கிடைத்தது" என்று குறிப்பிட்ட அன்பருக்கு வயது 70. புதிய விசயங்களைப் படிப்பதற்கு வயதொரு தடையில்லை தானே?
வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகள் என்றால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளின் முன்பே கழியும். கடந்த வெள்ளிக்கிழமை நல்ல வகையில் கழிந்தது நிறைவைத் தந்தது. இந்த முறை துபாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போல அபு-தாபியிலும் நடத்துமாறு வேண்டுகோள்கள் வந்திருப்பது நம் மக்களுக்கு இருக்கும் தமிழார்வத்தை வெளிப்படுத்தியது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்க படிவங்கள் வழங்கினோம். அதில், "நீங்க நல்லாயிருக்கனும்.. தமிழ் முன்னேற.." என்று ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தது எங்களை நெகிழச் செய்தது.
இதை விட வேறென்ன வேண்டும்?
29 comments:
அருமையான முயற்சி செந்தில்! என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள். நீங்க நட்சத்திரமானதுக்கும் வாழ்த்துக்கள்!!
பகிர்வுக்கு நன்றி தல ;))
அப்படியா
வாழ்த்துகள்
சந்தோசம் செந்தில். இது போன்ற நிகழ்வுகள் எவ்வளவு சந்தோசம் தெரியுமா? தெரியாதோருக்கு சொல்லித்தருதலை போன்ற ஒரு சந்தோசம் வேறெதிலும் கிடையாது... நிஜமாய் நெகிழ்வாயும் இருக்கிறது, உங்களால் இன்னும் சிலரை தெரிந்துகொண்டேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
:-)
மகிழ்வு நண்ப!
தங்கள் தமிழ் இணையப்பரவல் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
http://muelangovan.blogspot.com/
வாழ்த்துக்கள் செந்தில் எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழ்
//தமிழ் மென்பொருளை நிறுவுவதில் ஜெஸிலா, "குசும்பன்" சரவணன் ஆகிய இருவரும் உதவினர்.//
நல்லா பாத்துக்குங்க! நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்!!!
வாழ்த்துக்கள் செந்தில்!
அமீரகத் தமிழ் மன்ற குழுவினருக்கு வாழ்த்துக்கள்.....
நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள். முன்பே அறிவித்திருந்தீர்களா?
அபுதாபியிலும் நிச்சயம் நடத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன். பங்கு பெற மன்றத்தில் உறுப்பினராக வேண்டுமா?
தமிழ் வளர்ச்சியில் அமீரக தமிழ் மன்றம் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் எனது வாழ்த்துக்கள்..!
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
"நீங்க நல்லாயிருக்கனும்"
ம்... நாயகன் காட்பாதர் ரேஞ்சிக்கு போயிட்டிங்க செந்தில்!!
வாழ்த்துக்கள்.
=இஸ்மாயில் கனி
ஜித்தா
கலக்கிட்டீங்க ”தல”...
வாழ்த்துக்கள்......
பயனுள்ள முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஃபயர் ஃபாக்ஸ் உதவியுடன் தமிழில் தட்டச்சு செய்வதெப்படி என்னும் சுட்டி மிக உபயோகமாக இருக்கிறது. இது போன்ற பட்டறைகள் புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடரட்டும் இந்த குழுவின் பணி, வாழ்த்துக்கள்
வாங்க அபிஅப்பா, நன்றி.
வாங்க கோபி நன்றி.
வாங்க பிரதீப், நன்றி.
வாங்க பிரபாகர். நீங்க சொல்றது உண்மை தாங்க.. இது போல நிகழ்வுகள் மகிழ்வைத் தருபவையே!!
வாங்க சென்ஷி. நன்றி.
வாங்க மு.இளங்கோவன். நன்றி.
வாங்க பிரதாப். நன்றி.
வாங்க குசும்பன். ஹாஹா.. ஆமாங்க.. :))
வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி.
வாங்க ஹுசைனம்மா, ஆமாங்க.. முன்னாடியே அறிவித்திருந்தோம்.. அனுமதி இலவசம் தாங்க. எந்த நிபந்தனைகளும் இல்லை.. :))
வாங்க உண்மைதமிழன். நன்றி.
வாங்க ரவிசங்கர். நன்றி.
வாங்க கலை. கலாய்ச்சுட்டீங்க பாருங்க :) நன்றி.
வாங்க புதுப்பாலம். நன்றி.
வாங்க R.Gobi, நன்றி.
வாங்க Dr.எம்.கே.முருகானந்தன், நன்றி.
வாங்க வாசி, நன்றி.
நல்லதொரு முயற்சி.... வாழ்த்துகள்!!
என்ன நீங்க. தமிழில தமிழ்க் கணிமை பற்றி பயிலரங்கம் நடத்துவது பெருமையில்லையே. அங்கபாரு நிகழ்த்துதலும் தமிழில் இருக்கு. உங்களத்தான் வேரடி அமைப்பு என்று சொல்லுறதோ.
அருமை நண்பர் செந்தில்வேலன்,
நல்ல தமிழ் பணியை செவ்வன முடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..!!
பயிலரங்கம் நடத்திய அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
தமிழ் இணையப் பயிலரங்கிற்கான குழு ஒன்று உள்ளது. அதில் அனைவரும் இணைய வரவேற்கிறேன்.
http://groups.google.com/group/tamil-inaiya-payilarangam
அன்புடன்,
நிலவன்.
http://blog.nilavan.net
//அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் வெளியிடப்பட்டது.//
இந்த குறுந்தகடு பெறுவது எப்படி செந்தில்?
Post a Comment