"என்னங்க.. நீங்க பையனப் பாத்தீங்களாங்க?"
"ஆமாம்பா..உள்ள கிளீன் பண்ண எடுத்துட்டுப் போயிருக்காங்க"
"நாம.. அம்மாப்பா... ஆயிட்டமாங்க..ஐயோ.. என்னால நம்பவே முடியலங்க"
"பையன் சத்தம் கேட்குது பாருடா.."
....
...
...
"ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.."
ooo
"அப்பா.. உங்களுக்குப் பேரன் பிறந்துட்டான்..."
"ஹாஹ்ஹா.. அம்மா.. உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கான்... "
"அப்பாடி.. பொண்ணு நல்லா இருக்காளாப்பா.."
"நல்லா இருக்காங் அத்தை... நல்லா இருக்கா!!"
ooo
சில மணி நேரங்கள் கழித்து..
"ஏய், பையன் பிறந்திருக்கான்டீ..!!"
....
"ஆமா.. நல்லா இருக்கான்.. மூன்றரை கிலோ..!!"
.....
"இல்ல.. சுகப்பிரசவம் தான்.. ஆமா நல்ல டாக்டர்டீ.. நல்லபடியா பிரசவம் பார்த்துட்டாங்க.. அவங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்!!"
....
"ஆமா.. சான்ஸே இல்ல.. இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறதுக்கு!!"
...
"பையன், சினுங்கறான்பா.. அப்புறம் பேசுறேன்"
ooo
"மாப்ள.. அப்பா ஆயிட்டேன்டா.."
...
"பையன்"
.....
"ஆமா.. இங்க உடுமலைல தான்"
.....
"ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.."
......
"யாரு மாதிரின்னு எல்லாம் தெரியலடா.. நல்லா இருக்கான்"
....
"ஆமான்டா... ரொம்ப நன்றி!!"
ooo
"டாக்டர்.. ரொம்ப நன்றிங்க... எங்க மருமகளுக்கு நல்ல படியா பிரசவம் பார்த்துட்டீங்க"
"நான் உங்களுக்குத் தாங்க நன்றி சொல்லனும். பனிக்குடம் உடைஞ்சு 36 மணி நேரம் வரைக்கும் பொறுமையா இருக்க யாரும் தயாரா இருக்கமாட்டங்க. நீங்க என்னைய நம்புனதுக்கு ரொம்ப நன்றி"
"ஆமாங்.. டாக்டர்.. எங்க ரிலேட்டிவ்ஸ் சைட்லயும் ரொம்ப ப்ரஸர் இருந்ததுங்க.. நீங்க ஸ்கேன் பண்ணி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணினதுல நாங்க கொஞ்சம் தைரியமா இருந்தோம்.."
"யேஸ்..ஹூ(WHO) கைடுலைன்ஸ் படி, 48 அவர்ஸ் வரைக்கும் வெயிட் பண்ணலாம.. பேபி நல்லா இருக்கறப்பா.."
"ஓ.."
"உங்க பையன.. நல்ல தைரியமான ஆளா வளர்த்திருக்கீங்க!! பிரசவ வார்டுல இவரு இருந்தது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தது. நல்ல திடமா நின்னாரு....சில சமயம் கூட நிக்கறேன்னு வர்றவங்க மயக்கம் போட்டு விழுந்திடறாங்க. அதனால தம்பி.. You should be Proud of Yourself.. All the best"
"தாங்க்ஸ் டாக்டர்.."
ooo
எங்கள் குழந்தை பிறந்து (25.02.10) 12 நாட்களாகிவிட்டன. ஆனால், என் மனைவி சிந்திய ஆனந்த கண்ணிரும், டாக்டர். நிர்மலா பாலகுமார் அவர்கள் முகத்தில் தெரிந்த கருணையும், முதன்முதலில் பார்த்த எங்கள் குழந்தையின் முகமும், எங்கள் குடுபத்தினர் அடைந்த மகிழ்ச்சியும் கண்களிலேயே நிற்கின்றன. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை!!
"இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறது அபூர்வம் தான்!!" என்பது தான் எங்கள் குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்களும், நண்பர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்!!
ooo
30 comments:
படத்தில பார்த்த பையன் மாதிரியே இடுகையும் அழகோ அழகு செந்தில்
//You should be Proud of Yourself..//
நாங்களும் பெருமைப்படுகிறோம்...
அழகாய் கொட்டாவி விட்ட ரோஜாப்பூ போல இருந்த குழந்தையின் அப்பாவுக்காக
செந்தில்....
படிக்கும்போதே நெகிழ்வாயிருக்கிறது. பையன் என தெரியும், இவ்வளவு சிரமங்களுக்கிடையில் என்பது இப்போது தான் தான் தெரிகிறது.... ஜூனியருக்கு வாழ்த்துக்கள்....
பிரபாகர்.
வாழ்த்துகள் தலைவரே..:-)))
ஆஹா. குட்டிப்பயல் என்ன சொல்றாரு. வாழ்த்துகள் செந்தில்.
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் செந்தில்...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
congratulations, father!
உங்களின் மகிழ்ச்சி பெருமிதம் மேலும் பெருகட்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே,எப்போது ஜூனியர் அமீரகம் வருகிறார்?
பேறு காலத்தில் கூடவே இருந்ததால் உங்கள் மனைவியின் மீதான அன்பு எப்போதும் குறையாது.ஒவ்வொருவரும் இதை முயன்று பார்க்க வேண்டும்.
தல 'கவின்' அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டானா..:))
Congratulations Senthil.
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்ங்க..
அதே சூழல், அதே 36 மணி நேரக்கணக்கு, உங்களைப் போலவே, விவரிக்க வார்த்தைகள் இல்லாமல்..
http://kaiyedu.blogspot.com/2010/03/blog-post.html
வாழ்த்துகள் செந்தில் ;-)
நல்வாழ்த்துகள் செந்தில்.
சூழ்நிலை கண்முன்னே விரிகிறது..
வாழ்த்துகள்
குழந்தைக்கும், நூறாவது பதிவுக்கும்
நல்வாழ்த்துக்கள்
@@ கதிர்.
நன்றிங்க.
@@ பிரபாகர்,
நன்றிங்க.
@@ கார்த்திகைப் பாண்டியன்,
நன்றிங்க.
@@ வானம்பாடிகள்
நன்றிங்க
@@ பழமைபேசி,
நன்றிங்கண்ணா.
@@ சித்ரா,
நன்றிங்க
@@ கார்த்திகேயன்,
அமீரகத்திற்கு 5-6 மாதங்கள் கழித்து அழைத்து வரலாம் என்று எண்ணியுள்ளேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. அனைவரும் பிரசவத்தின் பொழுது மனைவியின் அருகிலிருப்பது நல்லது. நன்றி.
@@ வினோத்,
நல்லா இருக்கான். நன்றி.
@@ நானும் என் கடவுளும்,
நன்றிங்க
@@ நசரேயன்
நன்றிங்க
@@ முகிலன்
நன்றிங்க.
@@ கையேடு,
நல்ல இடுகை. விவரிக்க வார்த்தைகள் இல்லையென்பது உண்மை தான். நன்றிங்க.
@@ கோபிநாத்,
நன்றிங்க
@@ ஜோதிஜி,
நன்றிங்க
@@ நிகழ்காலத்தில்
நன்றிங்க
@@ சின்ன அம்மிணி,
நன்றிங்க.
வாழ்த்துக்கள் செந்தில்...
நல்ல விவரிப்பு....
மகிழ்வுகள் மற்றும் வாழ்த்துக்கள் செந்தில்..
வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள்
முழுதாக படிக்குமுன்பே கண்களில் நீர்திரையிட வெச்சுட்டீங்க...
குழந்தையும் தாய்க்கும் டாடிக்கும் வாழ்த்துக்கள்...
நூறாவது பதிவு இப்படி அமைஞ்சுபோறது எவ்வளவு அழகு !!!
வாழ்த்துக்கள்
பதவி உயர்விற்கு வாழ்த்துகள்ங்க..
வாழ்த்துக்கள் மாப்ள !!
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துகள் செந்தில். எனக்கும் அதே மகிழ்ச்சிதான், Feb 26 2010 , அன்று எனக்கு மகள் பிறந்தாள் -சமீர்
Post a Comment