சென்னை, கோவை போன்ற நகரங்களில் பல பண்பலைகள் (எஃப்.எம்.) இருப்பதைப் போல, அமீரகத்திலும் குறைந்தது 30-40 எஃப்.எம். சேனல்கள் உள்ளன. அவற்றுள் இந்தி, அரபி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒலிபரப்பாகின்றன. தினமும் அலுவலகத்திற்கும் செல்லும் பொழுது எனக்கு இந்தி அல்லது மலையாள எஃப்.எம் சேனல்களைக் கேட்பது வழக்கம். மலையாளச் சேனல்களில் இடையிடையே தமிழ்ப்பாடல்களைப் ஒலிபரப்புவதுண்டு!!
o
இன்று ஒரு இந்தி எஃப்.எம் சேனலைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது இரண்டு ரேடியோ ஜாக்கிகள் பேசிக்கொண்டது வியப்பாகவும், சிந்திக்கும் படியாகவும் இருந்தது..
"நேற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம் தோற்றுவிட்டதே..."என்ற முதலாமவர்
"ஆமா.. அவங்க டீம்ல சரியான பேட்ஸ்மேன் இல்ல.. அதனால தான்.." என்று பதிலளித்தார் இரண்டாமவர்.
"நீ போய் ஆட வேண்டியது தான?"
"ஹா.ஹா.. நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா? ஒரு பந்தில் இருபத்தி நாலு ரன் எடுக்க முடியுமா?"
"அது எப்படி?"
"ரஜினிகாந்த அனுப்பினாப் போதும். ஒரே பாலில் 24 ரன் எடுத்திருவார்.."
"ஹேய்.. என்ன சொல்ற?"
"ஒரு பந்தை அடிக்கும் பொழுது, அது நாலு பந்தா உடைஞ்சு, நாலும் பவுண்டரிக்கு வெளிய போய் விழும். அப்போ 24 ரன் தானே??" என்று கூறி "கெக்கெக்கே"வென்று சிரித்தர் இரண்டாமவர்..
o
ரஜினிகாந்தை வைத்துப் பல காமெடிகள் அவ்வப்பொழுது வட இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் வருவதுண்டு. பல முறை, அலுவலக உணவு வேளையின் பொழுது ரஜினியைப் பற்றி, அவரது தனித்தன்மையான "ஸ்டைல்" பற்றியெல்லாம் பேச்சு வந்தாலும், வட இந்தியர்கள் மத்தியில் ஒரு "கிண்டல்" தொணி இருக்கத்தான் செய்கிறது.
இது எதனால்? நம் ரசனையின் மீதான கிண்டலா? அல்லது, பொதுவாக தமிழர்களின் திறமையின் மீதான் காழ்ப்புணர்ச்சியா?
ஒவ்வொரு மாநிலத்தவரும், மொழி பேசுபவரும் அடுத்த மாநிலத்தவரைக் கிண்டல் செய்யும் போக்கு நமக்கு அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது!! இதில் நாமும் சளைத்தவர்கள் இல்லை. மலையாளம், தெலுங்கு, வங்காள, இந்தி மொழி பேசுபவர்களை வைத்து நாமும் பரவலாகக் கிண்டலடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் ஊடகங்களில் பங்கு மிகவும் முக்கியமானது.
இது உருவாக்கும் பிம்பம் என்ன? ஒருவர் "இந்த மாநிலத்தவர்" என்று நினைக்கும் பொழுது என்ன எண்ணம் உருவாகிறது?
பிகாரைச் சேர்ந்தவர் என்ற பொழுது லல்லுப்பிரசாத்தும், சட்ட ஒழுங்கின்மைதான் நினைவிற்கு வருகின்றன. பஞ்சாபைச் சேர்ந்த சிங்க் என்றவுடன் சர்தார்ஜி ஜோக்குகளும், குஜராத் என்றவுடன் கோத்ரா கலவரமும் தான் நினைவிற்கு வருகின்றன. இது தான் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றி நம் மனதில் ஏற்பட்டிருக்கும் அடையாளம்!! பிம்பம்!!
ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களுள் பிகாரைச் சேர்ந்தவர் எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகம். இந்தியாவிலேயே வளமான மாநிலமும், தனி நபர் வருமானத்தில் சிறப்பான இடமும் பஞ்சாம் மாநிலத்தவர்க்குத் தான். குஜராத் மாநிலம் தொழில்துறை, உள்கட்டமைப்பு போன்றவற்றுள் அடைந்துள்ள இடத்தைப் பிடிக்க, நமக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படுமாம்.
ஆனால், இது போன்ற விசயங்கள் நம் மனதில் பதிவதை விட ஊடகத் திணிப்பால் உருவான பிம்பம் தான் நம் மனதில் பதிகிறது.
o
தமிழகத்தின்/தமிழக மக்களின் அடையாளமாக பத்து விசயங்களைச் சொல்லச் சொன்னால் எவற்றைச் சொல்வோம்?
1. தமிழ் மொழி.
2. தமிழின் தொன்மையான நூல்கள்
3. தமிழக வரலாற்றுச் சின்னங்கள்/ நகரங்கள்/சுற்றுலத்தலங்கள்.
4. தமிழர்களின் கலைகள்
5. உயர்ந்த காடுகள் முதல் பரந்த கடல் வரை உள்ள தமிழக நில வளம்.
6. தமிழ் மக்களின் மனித வளம். எந்தத் துறையானாலும் திறமையான வல்லுனர்கள், தொழிலாளர்கள் கிடைப்பது.
7. தொன்மையான மருத்துவ முறைகள்.
8. தொழில்நுட்பத்துறை ஆய்வகங்கள், கண்டுபிடிப்புகள்
9. சென்னை, கோவை போன்ற தொழில்துறை நகரங்கள்..
10. பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள்.
ஆனால்.. தமிழகத்தைப் பற்றிய அடையாளமாக இருப்பவை எவை?
"ஹாய் செந்தில்.. இஸ் எவ்ரிதிங் ஃபைன் வித் சவுத்? அம்மா, ரஜினி ஆல் ஃபைன்?" என்ற கேள்வியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேட்கும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!! அவர்களைக் குறை கூறி ஒன்றும் செய்வதற்கில்லை!!
o
"நீங்கள் இறந்து விட்டீர்கள்!! இரங்கல் கூட்டம் நடக்கிறது!! உங்களைப் பற்றி ஒவ்வொருவராகக் கருத்துகளைக் கூறுகிறார்கள்!! உங்களைப் பற்றிப் பல கருத்துகளைக் கூறுகிறார்கள்!! நண்பர்கள், உறவினர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவராக உங்களைப் பேசுகிறார்கள்!!
சிலர் உங்களைப் பற்றி பேசும் பொழுது, 'நாம் எதிர்பார்த்த படி இவர்கள் பேசவில்லையே' என்று உங்கள் மனம் வருந்துகிறது.
உங்கள் சாவின் இரங்கல் கூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன கூறினால் மகிழ்ச்சியடைவீர்கள்?"
"Stephen Coveyன் 7 Habits of Highly Effective People" என்ற நூலில் இடம்பெறும் வரிகள் இவை!!
சிலர் உங்களைப் பற்றி பேசும் பொழுது, 'நாம் எதிர்பார்த்த படி இவர்கள் பேசவில்லையே' என்று உங்கள் மனம் வருந்துகிறது.
உங்கள் சாவின் இரங்கல் கூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன கூறினால் மகிழ்ச்சியடைவீர்கள்?"
"Stephen Coveyன் 7 Habits of Highly Effective People" என்ற நூலில் இடம்பெறும் வரிகள் இவை!!
இந்த வரிகள் அனைவருக்கும் பொருந்தும்!! தனி நபர்க்கும் பொருந்தும், ஒரு குழுவிற்கும் பொருந்தும், ஒரு இனத்தவர்க்கும் பொருந்தும்!!
ரஜினியைக் கிண்டலடித்த ரேடியோ ஜாக்கியைப் பற்றி நினைத்து என்ன செய்ய?
o
ம்ம்... தமிழ்ப் பதிவர்களையும், பதிவுலகத்தைப் பற்றிய பிம்பம் எப்படி இருக்க வேண்டும்?
இப்பொழுது எப்படி இருக்கிறது?
o
14 comments:
நன்றி...
நல்ல சிந்தனைக்கான இடுகை...
இடப்படும் ஒவ்வொரு இடுகையும் சமூகத்தின் பிம்பம் எனும் கோட்டையை நிறுவுகிறது....
அது அழகிய கோட்டையா? அல்லது குப்பைமேடா??
இடப்போகும் இடுகைகளில் கவனம் செலுத்துவேன். நன்றி!!
ரஜினி பற்றி நம்ம ஆளுங்களே அடிக்கிறதில்லையா.. சும்மா லூசுல உட்டுட்டுப் போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
ஊடகங்கள் எவ்வளவோ விஷயங்கள் எழுதுகின்றன. நல்ல விஷயங்கள் ஏன் மனதில் படியவில்லை. நீங்கள் சொன்ன விஷயங்கள் - பீகாரில் இருந்து ஐ.ஐ.டி சேரும் மாணவர்கள் அதிகம் என்பது ஊடகத்தில் படிச்சதுதானே..
மனித மனம் அப்படித்தான். நைஜிரியா என்றவுடன் இ-மெயில் தான் ஞாபகத்துக்கு வருது. இங்க வந்த பிறகுதான் இந்த நாட்டின் பன்முகம் தெரிய வருகின்றது.
/ம்ம்... தமிழ்ப் பதிவர்களையும், பதிவுலகத்தைப் பற்றிய பிம்பம் எப்படி இருக்க வேண்டும்?
இப்பொழுது எப்படி இருக்கிறது?/
என்ன சொல்வது? பல idolகள் நொறுங்கின. சில வைரங்கள் இன்னும் ப்ரகாசமாய். ஒன்று நெஞ்சு நிறைத்தது. ஒன்று நெஞ்சு கனத்தது:(
ஒருவரால் மலை உச்சியை அடைய முடியா விட்டால், அடுத்தவருக்கு கீழே குழி பறித்து அவரை தன்னை விட தாழ்வாக செய்து, தன்னை உயர்த்தி கொள்ளும் மனிதர்கள் பலர். Basic Ethics தெரிந்து கொண்டு நடப்பது நல்ல பண்பு. சென்ற வாரம், இங்குள்ள ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு வகுப்பில் உதவ சென்ற சமயத்தில் அவர்களது வகுப்பு ஆசிரியை சொல்லி கொடுத்து கொண்டிருந்ததை கவனித்து கேட்டேன். " யாரையும் அவர்களது race, color, country, status, gender, age, looks வைத்து நோகும் படி பேசாதீர்கள்."
கொஞ்சம் ஸ்டைலா பேசுனாலும் சரி... ஏதாச்சம் வித்தியாசமா பண்ணாலும் சரி...உடனே பார்றா ரஜீனிகாந்த் வந்துட்டான் அப்படிங்கிறாயங்க... ரஜீனி் பண்றதும் அந்தமாதிரிதான் இருக்கு... அது ரஜீனியோட தப்பா அதை அவரிடம் எதிர்பார்க்குற அவரோட ரசிகளின் தப்பான்ன தெரில. ஆனா இதுல ரேடியோ ஜாக்கிங்கோளட தப்பு எதுவுமே இல்ல...
இது தமிழ் படங்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் தான். சமீபத்தில் உருவாக்கபட்ட இந்த மாதிரியான கலாசார தாக்குதலுக்கு மூல காரணம் தெரியுமல்லவா ?
நான் சில இடுகைக்கு முன்னால் தங்கள் எழுத்துக்களை நோக்கத்தை சொன்னதைப் பற்றி இன்று மணி முதல் கருத்தாக சொல்லியுள்ளார்.
எவரையும் திருத்த வேண்டும் என்பதை விட நமக்கான கடமையையாவது செய்யலாம்.
யப்பா... எங்கிருந்து... எங்கே வர்றீங்க!!!
நல்லது செந்தில்
//அல்லது, பொதுவாக தமிழர்களின் திறமையின் மீதான் காழ்ப்புணர்ச்சியா?//
மும்பைகாரன் வந்தா அவன்கிட்ட ஐஸ்வர்யாராய், ராணி முகர்ஜி பத்தி எல்லாம் நம்மல்ல சில பேரும் கேட்பாங்க இல்லையா? அதுக்காக எல்லாரும் மராத்தியா என்ன? கிட்டதட்ட அந்த மாதிரிதான். ரஜினியை தமிழர்னு நினைச்சுருவாங்க :)
நான்கூட ரசினியப்பத்திதான்னு நெனச்சிட்டேனுங்க.
நீங்க சொல்றது கரைட்டுதாங்க...
நிறைய மாய பிம்பங்கள் உண்டு (துபாய் போல). அவற்றைத் தாண்டி உண்மை சொரூபத்தைக் கண்டுகொள்தல் நலமே.
/அம்மா, ரஜினி ஆல் ஃபைன்?"//
மத்திய அமைச்சர்களையும், ஏன் துணைப் பிரதமரையும் ஆதரவு தேடி தன் வீடு நோக்கி வரவழைக்கும் அளவிற்கு செய்த “அம்மா”வால்தானே நடுவண் அரசியலில் தமிழ்நாடு ஒரு கிள்ளுக்கீரை என்ற நிலை மாறியது!! ;-)))
ரஜினியை கிண்டல் செய்து நிறைய ஹிந்தி பட காமெடிகளும் உண்டு,காய்க்கிற மரம் தானே கல்லடி படும்.அவர்களுக்கு தமிழன் என்றாலே திறமைசாலி,ஆங்கில அறிவு மிக்கவன் என ஒரு வயிற்றெறிச்சலும் உண்டு.
====
எனக்கு டாக்ஸி பிடிக்க மட்டுமே ஹிந்தி தேவைப்படுகிறது,அதனாலேயே எனக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள அவசியம் ஏற்படவில்லை.
====
ஹிந்தி படங்கள் சரியான ம்சாலா ரகம்.
இப்போது புரட்சியாக ஆங்கிலப்படம் போல அப்பட்டமான உடலுறவு காட்சிகளுடன் ஒரு படம் வந்துள்ளது
http://en.wikipedia.org/wiki/Love_Sex_aur_Dhokha
லவ் செக்ஸ் அவுர் தோக்கா
எப்படி அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள் புரிகிறதா?
எனக்கு ஒரு பிலிப்பினோ அனுப்பிய மெயிலில் புலி மானை துரத்தும் அந்த புலியைவிட வேகமாக ஓடி அந்த மானை கையிலே தூக்கினு போய் காப்பாத்துவார்...
லாஜிக் ஒன்னை வெச்சிக்கிட்டு என்னமா பந்துவிளையாடுறானுங்க
காமெடிப்பதிவேன்று வந்தால் ரொம்ப சீரியஸா இருக்கே....
Post a Comment