Tuesday, November 3, 2009

பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் - அப்துல்கலாம் கலாநிதிமாறன் மற்றும் பலர்...


நமக்கு பிடித்தவை பிடிக்காதவை என்ன என்பதை எழுதினால் எப்படி இருக்கும்?

நாமாக எழுதுவது சுயதம்பட்டம் அடிப்பதாக இருக்கும் என்பதனாலோ என்னவோ தொடர்பதிவிட நண்பர்கள் அழைக்கிறார்கள். பதிவுலக சுவாரஸ்யங்களில் இது போன்ற தொடர் பதிவுகளும் ஒன்று. என்னை அழைத்த நண்பர் கதிர் அவர்களுக்கு நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:


1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


தொழில்அதிபர் :
பிடித்தவர் : கேவின் கேர் - ரங்கநாதன் ( ஹிந்துஸ்தான் லீவரிற்குப் போட்டி கொடுப்பதற்காக.. )
பிடிக்காதவர் : கலாநிதி மாறன்.

விஞ்ஞானி
பிடித்தவர்: அப்துல் கலாம்
பிடிக்காதவர் : எம்.எஸ்.சுவாமிநாதன்


கல்வியாளர் / மேலாண்மை துறை வல்லுனர்
பிடித்தவர்: சி.கே.பிரஹலாத் ( அமெரிக்காவில் குடியிருந்தாலும் மேலாண்மைத்துறையில் இவரது பங்கிற்காக.. )
பிடிக்காதவர்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்.

எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். இராமகிருஷ்ணன் ( எளிமையான எழுத்திற்காக)
பிடிக்காதவர் : சாருநிவேதிதா

இயக்குனர்
பிடித்தவர் : சேரன்
பிடிக்காதவர் : எஸ்.ஏ. சந்திரசேகர்

நடிகர்:
பிடித்தவர் : கார்த்திக் சிவகுமார்
பிடிக்காதவர் : சிலம்பரசன் ( அலம்பல் தாங்க முடியலங்க.. )

நடிகை:
பிடித்தவர் : ஊர்வசி ( நகைச்சுவையில் கலக்குவதற்காக.. )
பிடிக்காதவர் : ராதிகா ( விடாமல் சின்னத்திரையில் வந்து கடுப்படிப்பதனால்... அதுவும் அந்த போலீஸ் உடையிருக்கே.. அப்ப முடியல.. )
இசையமைப்பாளர்:
பிடித்தவர் : இளையராஜா ( விளக்கம் வேண்டுமா என்ன... )
பிடிக்காதவர் : எஸ்.ஏ. ராஜ்குமார் ( விடாம லாலாலா போடுவதற்காக... )
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிடித்தவர்: கோபிநாத்.
பிடிக்காதவர்: திவ்யதர்ஷனி.
வானொலி பண்பலை தொகுப்பாளர்
பிடித்தாவர் : செல்வராஜ் ( கோவை சூரியன் எஃப் எம் கேட்பவர்களுக்குத் தெரியும்.. )
பிடிக்காதவர் : ஸ்டைலாகப் பேசுவதாக நினைத்து தமிழைக் கொல்லும் அத்தனை பேரும்.
அரசியல்வியாதிகள் - பெயர் குறிப்பிடக்கூடத் தகுதியற்றவர்கள். அதனால் தவிர்த்துவிட்டேன்!! திரு. நல்லக்கண்ணு போன்ற ஒரு சிலரைப் பிடிக்கும். ஆனால் பிடிக்காதவர்கள்??

இந்தத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது
நாகா
கார்த்திகேயன்
கலையரசன்.. ( நானே பலரை அழைத்து விட்டால் நண்பர்கள் என்ன செய்வார்கள் அதனால் மூன்று பேர் மட்டும் :) )

..

20 comments:

பிரபாகர் said...

உங்களின் தேர்வில் உள்ள சிம்பு, விஸ்வநாதன், சந்திரசேகர்..... என யாவும் நான் எழுத இருந்தவை.... ம்... மாத்தி யோசிக்க வேண்டியதுதான். எல்லாராலும் ஏற்றுக்கொள்ளும்படி எழுதியிருக்கீங்க...

பிரபாகர்.

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல ;)

கோவி.கண்ணன் said...

//பிடிக்காதவர் : ராதிகா ( விடாமல் சின்னத்திரையில் வந்து கடுப்படிப்பதனால்... அதுவும் அந்த போலீஸ் உடையிருக்கே.. அப்ப முடியல.. ) //

:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
கேட்ட கேள்விகளும் சொன்ன பதில்களும் நருக்கு தெரித்தாற்போல இருந்தது.
நாங்கள் மனதில் நினைத்த ப்ரபலங்கள் அதில் பிடித்தவையில் இருந்தனர்.
தொடர அழைத்தமைக்கு நன்றி
விரைவில் தொடருகிறேன்.

கதிர் - ஈரோடு said...

//பிடித்தவர் : கேவின் கேர் - ரங்கநாதன் //

நல்ல சாய்ஸ்

வானம்பாடிகள் said...

:). நல்ல சாய்ஸ்.

பட்டிக்காட்டான்.. said...

//.. பிடித்தாவர் : செல்வராஜ் ( கோவை சூரியன் எஃப் எம் கேட்பவர்களுக்குத் தெரியும்.. ) ..//

சூர்யோதயம் நிகழ்ச்சியை மறக்க முடியுங்களா..?

Anonymous said...

Nalla BathilgaL Senthil. UngaL rasanai NanRaaga irukkiRathu.

Enakkum Oorvasi migavum pidikkum. Raadhika patri sonnathu rombave sari!

Deepa (SidhaRalgaL) (ethanaalo profile select seyya mudiyavillai)

கலையரசன் said...

//பிடித்தவர் : ஊர்வசி ( நகைச்சுவையில் கலக்குவதற்காக.. )//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்்வ்வ்வ்வ்

//பிடிக்காதவர் : ராதிகா //

அக்க்கக்்க்க்க்்ககக்்க்்க்க்

///பிடிக்காதவர் : சாருநிவேதிதா //

ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ

Cable Sankar said...

சீரியலை பாருங்கன்னா..ராதிகா ட்ரெஸ்ஸைபாத்துட்டி இருக்கீங்க..

பழமைபேசி said...

:-0)

என் பக்கம் said...

:-)

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

//இயக்குனர்
பிடிக்காதவர் : எஸ்.ஏ. சந்திரசேகர் //

பிடிக்காதவர்கள் வரிசையில் வைக்கும் அளவுக்கு அவரது இயக்கம் பிடித்திருக்கா ?

( இந்த பின்னூட்டதை இட்டுக்கொண்டிருபவர் உங்கள் "விஜய்")

வினோத்கெளதம் said...

கலக்கல் பதில்கள் தல..:)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பிரபாகர், நன்றி

வாங்க கோபிநாத். நன்றி

வாங்க கோவி.கண்ணன். நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கார்த்திகேயன். நன்றி.

வாங்க கதிர். நன்றி

வாங்க பாலாண்ணே. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பட்டிக்காட்டான். உண்மைதாங்க. அருமையான தொகுப்பாளர் அவர்.

வாங்க தீபா. நன்றி.

வாங்க கலை. நன்றி :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கேபிள்சங்கர். என்னங்க பண்றது கோரமா வந்து நிக்கறாங்களே.. :)

வாங்க பழமையண்ணே. நன்றி

வாங்க பிரதீப். நன்றி.

வாங்க ஞானப்பித்தன். நன்றி.

வாங்க வினோத்கௌதம். நன்றி

குப்பன்.யாஹூ said...

your selection is perfectly right

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

பிரதீப் கூட வந்துருக்காரு. உசுப்பேத்திவிட்டுட்டு ஓரமா நின்னா எப்படி செந்தில்?

நாகா பதிலில் பார்க்க.

Related Posts with Thumbnails