Friday, May 29, 2009

அது ஒரு "பிக் ஃபன்" காலம்!!

நம்ம சின்ன வயசுல எதுக்கெல்லாம் அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்கி இருப்போம்?

படிக்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, குறும்பு-சண்டை போடறதுக்கு,..... இது கூட அதிகமா "பப்புல் கம்" சாப்பிடறதுக்கும் திட்டு வாங்கி இருப்போம்!!

"பப்புல் கம் முழுங்கீட்டீன்னா குடல்ல சிக்கிக்கும்"னு வீட்ல சொல்றதயும் கேட்காம, அந்த பப்புல் கம் மேல அப்படி ஒரு மோகம்!!
மோகத்துக்கு காரணம் கிரிக்கட் தாங்க!!


"பிக் ஃபன்" பப்புல் கம் கவர பிரிச்சா அதுல நம்ம கிரிக்கட் வீரர்களோட படத்தோட "score 6 runs" அல்லது "Score 4 runs"னு ஒரு பேப்பர் இருக்கும் பாருங்க அதுக்குத்தாங்க இத்தன அடிதடி!!

அதுலயும் கபில்தேவ், விவ் ரிச்சர்ஸ் காகிதம் வராதானு ஒவ்வொருத்தருக்கும் போட்டியா இருக்கும். ஏன்னா அதுல தான "score 6 runs" வரும். அந்தக் ஸ்டிக்கர் கிடைக்கறதுல ஒரு பெருமை வரும் பாருங்க. ஸ்கூலுக்கு போனாலும் நம்ம பாக்கட்ல அந்த ஸ்டிக்கர் கலெக்ஷன் இருக்கும்...

இத சேர்த்து என்ன பண்ண?


இந்த காகிதங்கள எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போய் கடைல கொடுத்தம்னா, கடைக்காரரு அடுத்த மாசம் ஆரம்பிக்கப் போற போட்டியோட அட்டவனையோ அல்லது கிரிக்கட் வீரர்களோட போட்டாவையோ கொடுப்பாரு....

100 ரன் சேர்த்தோம்னா - ஒரு கிரிக்கட் வீரரோட கையெழுத்துப் போட்ட படம் அல்லது அட்டவனை...
200 ரன் சேர்த்தோம்னா - கிரிக்கட் வீரர்கள் வெவ்வெற ஷாட் அடிக்கிற மாதிரி படங்கள்.

எனக்கு ஹூக் (hook), கட்(cut), புல்(pull), டிரைவ்(drive) எல்லாத்துக்கும் அறிமுகமே இந்த பிக்ஃபன் படங்கள் தான்.. அதுக்கு முன்னாடி நமக்கு தெரிஞ்சதெல்லாம் டொக்கு வைக்கறது, கூட்டறது, வழிக்கறது போல ஷாட் தான :)

இந்த "பிக்ஃபன்" மார்க்கெட்டிங் உத்தி ரொம்ப பாரட்டப் பட வேண்டியது தான். சும்மா ஒரு 25 பைசா "பப்புல் கம்"ம அருமையா கிரிக்கட்டோ இணைச்ச விஷயம் ஆச்சர்யம் தாங்க!! இந்த அளவுக்கு வேற எந்த ஒரு பிராண்டையும் கிரிக்கட்டோட இணைச்சுப் பார்க்க முடியல!!

இப்ப தான் எந்த சேனல போட்டாலும், எந்த விளம்பரத்த பாத்தாலும் கிரிக்கட் வீரர்கள் ஆச்சே!! அதனால தான் இந்த மாதிரி உத்தி எதுவும் வரலேன்னு நினைக்கறேன்...

இப்போ "பிக்ஃபன்" கம்பெனி இருந்த இடம் தெரியாம போயிட்டாலும், நம்ம சின்ன வயசு கிரிக்கட் ஞாபகத்துல இந்த "பிக் ஃபன்" பப்புல் கம்முக்கும் ஒரு இடம் இருக்கும்...

என்ன சொல்றீங்க?

உங்க நினைவுகளையும் கீழே பதிவு செய்யுங்க!!
.............

பாட்டு பஸ் பத்தின மலரும் நினைவகளையும் படிச்சுப் பாருங்க :)

.......

13 comments:

Anonymous said...

You are correct
-Vijay

ஆயில்யன் said...

இந்த பிக் பன் வாங்கி திங்கிறதுக்கு வூட்ல ஒரு ரூபா காசு எல்லாம் மிச்சம் - திருடி - வந்திருக்கேன் ஸ்கூலுக்கு அந்த நினைப்புத்தான் இன்னும் இருக்கு! :)

Anonymous said...

:) nice, i was mad too at the time !

ஸ்ரீ.... said...

அழகிய நாட்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இன்னும் தொடருமென எதிர்பார்க்கிறேன்.

ஸ்ரீ....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஆயில்யன்...

வருகைக்கு நன்றி!! ஆமாங்க... பிக்ஃபன் மேல அப்படி ஒரு மோகம் எல்லோருக்கும்....

@ Vijay, Manippakkam, ஸ்ரீ....

வருகைக்கு நன்றி!!

Anonymous said...

Very Good & sweet remembrance.Also WWW trump card was very famous at that time. Hope u did not forgotten the sentence "Height 7.2' Clash"

jagadeesh melbourne said...

hi,
senthil i am also exprience same kind of feeling.
when we start before the match team captain distribute bigfun all the players that is his own expences.that days exatly on 1986's. Is in't?

அன்புடன் அருணா said...

அட....நான் கூட இதிலே பைத்தியமா இருந்திருக்கேன்...
அன்புடன் அருணா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஜகதீஷ்... நான் பிக்ஃபன் பைத்தியமா சுத்துனது 1988ல இருந்து 92 வரைக்கும்னு நினைக்கிறேன்!!

அன்புடன் அருணா, Sriram,

வருகைக்கு நன்றி!!

sowri said...

Me too.. I once got a cricket book with my collection. Also i remember collecting Disney character in the cap of a Orange Drink (Gold Spot)which is very famous. You may be interested in this blog http://8ate.blogspot.com

Sankar Kumar said...

Nalla vaelai !!! kasu kodutho illa thirudiyo nan vangala.... nan irrunthathae bakery than.... ellamae oosi than.... :D

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@sowri,

நீங்க கொடுத்த சைட்ட படிச்சு பார்த்தேங்க... ரொம்ப நல்லா இருக்கு!!

@Sankar Kumar,

வருகைக்கு நன்றி!!

Anonymous said...

Dear Senthil,

Dear Senthil,

Me too....
I got big cricket map with useful infromations.
Nice article which brought me back all sweet memories.
Thanks & Regards,

Rajesh-Mettupalayam

Related Posts with Thumbnails