ஏதோ கடினமான ஆங்கில வார்த்தைனு நினைச்சு அகராதி எல்லாம் தேடாதீங்க!!
தகவல்களுக்கு எப்படி விக்கிபீடியாவோ, தேடலுக்கு எப்படி கூகுளோ அந்த வரிசைல "பாடல்கள்னா ஸ்பாட்டிஃபை"ங்கற இலக்கு நோக்கி ஆரம்பித்த நிறுவனம் தான் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த SPOTIFY நிறுவனம்.
நமக்கு தெரியாத பாடலா? நாம தான் எல்லாத்தையும் வலையதளத்துல இருந்து (ஓசில) தரவிரக்கம் செய்யறோமே இது எதுக்கு புதுசான்னு நீங்க நினைக்கறது புரியுது.
ஸ்பாட்டிஃபை சேவையும் ஆர்குட், ஃபேஸ்புக் போல சமூக வலைத்தள அமைப்பு உடையது தான். இதில் கணக்கு வைத்துக்கொள்ள ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் நம்மை அழைக்க வேண்டும்.
இதில் சேர்வதால் என்ன பயன்?
லட்சக்கணக்கான பாடல்களை இலவசமாக வலைத்தளத்திலேயே கேட்க முடியும். இது வரை பத்து லட்சத்திற்கும் மேலானா பாடல்கள் உள்ளதாம் இந்த தளத்தில். நம்ம ராகா.காம் (Raaga.com) ஏற்கனவே இது போல சேவை வைத்திருந்தாலும் இந்த அளவிற்கு சர்வதேச பாடகர்களின் பாடல்கள் இருக்குமா என்பது சந்தேகமே!!
ஃபேஸ்புக்கில் எப்படி நாம் நமக்கு பிடித்த விஷயங்களை நண்பர்களுக்கு பகிர்கிறோமோ, அதே போல பாடல்களையும் பகிர முடியும். ஒவ்வொரு நாளும் தோராயமாக 40ஆயிரம் பேர் கணக்கு ஆரம்பிக்கிறார்களாம், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் சேர்க்கபடுகிறதாம். ஆப்பிள் நிறுவனம் ஸ்பாட்டிஃபையை தங்கள் செல்போனிலேயே உபயோகிக்கும் படி தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது இங்கே கொசுறு செய்தி!!
பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைத்திருப்போர் பாடல்களை தரவிரக்கம் செய்யவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். இது தான் ஸ்பாட்டிஃபையில் வர்த்தக முறை (Business Model)
இப்படி நமக்கு நல்ல "அசல்" இசையை அனுபவிக்கும் வாய்ப்பு, இசை வெளியீட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில் வர்த்தகம், ஸ்பாட்டிஃபைக்கு விளம்பரத்தில் வருமானம்னு இது ஒரு வெற்றி-வெற்றி-வெற்றிக் கூட்டணி!!
உங்கள் நண்பர் யாரும் ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைக்கவில்லை என்றால் www.spotify.com என்ற முகவரிக்கு உங்கள் ஈமெயில் முகவரியைக் கொடுத்து பதிவு செய்யுங்கள்.
ஆர்குட், ஃபேஸ்புக், ப்ளாக்கர் என தமிழர்கள் புகுந்து கலக்கும் போது ஸ்பாட்டிஃபைய மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?
நான் பதிவு செய்து விட்டேன், நீங்க ஸ்பாட்டிஃபைக்க தயாரா? Are you ready to spotify?
.........................................
நோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...
2 comments:
You have truly become a writer yaar..
Nithi.
இதோ இப்பொழுதே spotify செய்து விடுகிறேன் :)
Post a Comment