Sunday, May 24, 2009

கூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா!!

நமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்?

விக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன..

இவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை...

ஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா?

உதாரணத்திற்கு "இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும்.

இன்னொரு தேடல், "நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்?" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்..

இது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா? கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது "வொல்ஃப்ரம் ஆல்பா" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா?

முதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே!! http://www40.wolframalpha.com/input/?i=udumalpet+to+Newyork



இன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா?
http://www40.wolframalpha.com/input/?i=Apple+Google





உங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=SD+of+55%2C35%2C78%2C50%2C68%2C70%2C48




நம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் http://www40.wolframalpha.com/input/?i=India+China+per+capita+income


இது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், பொறியியல் கணக்குகள், பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ஆல்பா..
http://www40.wolframalpha.com/examples/


வொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர "வொல்ஃப்ரம்" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன? நீங்களும் உபயோகிச்சுப் பாருங்க... பிறகு சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே?
..........


நோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...

"ஓவி"யை வரவேற்கத் தயாரா?

13 comments:

Tech Shankar said...

அசத்தல். எங்க லோக்கல் தகவல்கள் எல்லாம் அங்கே கிடைக்கும் போலிருக்கே.

கொடுத்து பார்த்தேன் - அசத்துது. உள்ளூர் தகவல்கள் எல்லாம் - கிடைக்குது. ஆனால் பிராந்திய மொழி, யுனிகோடில் வரலையோன்னு நினைக்கிறேன். சரியா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தமிழ் நெஞ்சம், வருகைக்கு நன்றி!!

நீங்க சொல்றது சரி தாங்க... நம்ம பிராந்திய மொழிகள் இல்ல தான். இப்பதான ஆரம்பிச்சிருக்காங்க...

பாப்போம்!!

Udumalai Farook said...

அருமையான அறிவுபூர்வமான தகவல். நீங்கள் என்ன உடுமளைபேட்டையை சேர்ந்தவரா ?


உடுமலை பாரூக்
துபாயில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஃபரூக்,

நான் உடுமலையைச் சேர்ந்தவன் தான் :-)

கலையரசன் said...

பயங்கர கண்டுபிடிப்பில் இருக்கீங்க போல?
பயனுள்ள தகவல்! பகிர்ந்ததற்க்கு நன்றி!!

கலையரசன் said...

ஹலோ பாஸ்....
துபாய்லயா இருக்கீங்க..
நானும் துபாய்தான்!
நானும் இன்னம்பிற பதிவர்களும்,
துபாய்ல பதிவர் சந்திப்பு போடலாமுன்னு இருக்கோம்.
விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்!
www.kalakalkalai.blogspot.com

Anonymous said...

Thank u so much for a Valuable Information...

Pradas From Sri Lanka

Anonymous said...

Dear Senthil,

Great, Very Good information.
Thanks

Rajesh-Mettupalayam

VT RAJ said...

useful information,keep giving this type of info.
regards
raj

P.K.K.BABU said...

SOOPPER RECOMMONDATION...CONGRATS. GIVE ME MORE.......

Anonymous said...

Great work dude
Keep up ur good work
Ram
-Colombo

VISARA said...

nalla thagaval...nantri

VISARA said...

nalla thagavalkal...nantri.

Related Posts with Thumbnails