Friday, July 24, 2009

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - 1

ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )...
**************************************************************************************
உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்?

சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட மறக்க முடியாத வர்த்தகச்சின்னங்கள் பத்தி தான் இங்கே பார்க்க போறோம்..

1. ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s)

நமக்கு இந்த வண்டி அறிமுகம் ஆனதே எங்க வூட்டுக்கு வர்ற பால்காரர் மூலமாத்தான். அவரு வண்டி கைப்பிடில பூச்சுத்தி வச்சிருப்பாரு. அதனால விவரம் தெரியற வரைக்கும் இதுக்கு பேரு பூவண்டி.

இந்த வண்டில இருந்த வசதியப் பத்தி சொல்லனும்னா, குரங்குப் பெடல் போடலாம், டபுள்ஸ், டிரிபுள்ஸ் போகலாம், என்ன அடி அடிச்சாலும் தாங்கும். எத்தனையோ வீடுகள்ல குழந்தைகள உட்கார வைக்கற அளவுக்கு ஒரு சீட்டும் வச்சிருப்பங்க. இந்த வண்டில விளக்கு எரியலன்னு எங்கூரு காவல் நிலையத்துல பிடிச்சு வைச்சுக்கறது கூட நடக்கும் :))

இந்த வண்டியோட செல்வாக்கு ஹீரோ ரேஞ்சர், BSA SLR எல்லாம் வர ஆரம்பிச்சவுடனே குறைய ஆரம்பிச்சிருச்சு.. ஆனாலும் நல்ல நேரம் எம்.ஜி.ஆர்ல ஆரம்பிச்சு, தலைவரோட அண்ணாமலை வரைக்கும் வந்த வண்டிங்கரங்காட்டி இதுக்கு எப்பவுமே நம்ம மனசுல ஒரு இடம் இருக்கத்தாங்க செய்யுது.

"ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது" பாட்டைப் பொது இடங்கள்ல பாடத் தடை செஞ்சிருந்தாங்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் பிரபலமா இருந்ததுங்கறத இப்ப நம்ப முடியுதா?
*********
2. டிவிஎஸ் - 50 ( 1980 - ....)

"நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL", இந்த விளம்பரத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.

இதுக்கு முன்னாடி இருந்த லூனா, சுவேகா மாதிரி வண்டியெல்லாம் என்ன முறுக்கினாலும் 30 கிமி வேகத்தைத் தாண்டாது. அந்த நேரத்துல தான் நம்ம டிவிஎஸ் - 50 வந்ததாம்.

நம்ம ஊருக்காரங்களக் கேட்டாத் தெரியும். மூனு சிலிண்டர ஏத்தி வச்சிட்டு, பின்னாடி ஒரு துணிக்கட்டையும் வச்சிட்டு போவாங்க பாருங்க. இப்ப இருக்கற மினிடார் (MINIDOR) செய்யற வேலைய இது செய்யும்.


ஒரு சின்னக் குடும்பத்துல இருக்கற அத்தனை பேரையும் ஏத்திட்டுப் போக முடியும். காலப்போக்குல டிவிஎஸ் - 50, XL SUPERஆ மாறிடிச்சு. இப்போதும் திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் இந்த வண்டியைப் பார்க்க முடியும்.

*******
3. பஜாஜ் செடாக் ( 1972 - 2005)

"ஹமாரா பஜாஜ்".. இந்த வாசகத்தக் கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.

நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்கனு நினைச்சுட்டு இருந்தேன், நான் ஒருமுறை ஹைதராபாத் போகிற வரைக்கும். நம்ம தமிழகத்தத் தவிர்த்துட்டுப் பார்த்தா மற்ற மாநிலங்கள்ல அதிகமா பார்க்க முடியறது இந்த வண்டி தாங்க.

"ஹமாரா பஜாஜ்"ங்கர வர்த்தக வசனத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு சின்ன குடும்ப முழுக்க இந்த வண்டில சவாரி செய்ய முடியும்..

நம்ம பஜாஜ் பல்சர் மற்றும் இதர 4 STROKE எஞ்சின் வண்டிக வர ஆரம்பித்த பிறகு இந்த வண்டியோட செல்வாக்கு குறைய ஆரம்பித்து விட்டது.

********

4. யெஸ்டி : ( 1961 - 1995 )

ராஜ்தூத், புல்லட் மாதிரி வண்டிகள் இருந்த போது கோலோச்சிய வண்டி தான் "யெஸ்டி". இப்ப ஒரு 40 வயதாகிறவங்களக் கேட்டுப் பாருங்க.. இந்த வண்டி தான் அப்போதைய இளைஞர்கள் விருப்பமாம்.

வண்டிய 'ஸ்டார்ட்' பண்ணவே கடினம்னாலும், இந்த வண்டி மேல மிகுந்த மோகமாம். இப்பவும், என் நண்பர் ஒருத்தர் இந்த வண்டிய பயன்படுத்தீட்டு இருக்கிறார்..
********
5. இண்ட் சுசுகி ( 1980s - 1990s )

இந்த வண்டி வந்த பிறகு தான் இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அடுத்ததாக வந்த AX-100R வரும் வரை இந்த வண்டி பிரபலமாக இருந்தது.

புன்னகை மன்னன் படத்தில் கமல், மௌன ராகம் கார்த்திக் என்று இந்த வண்டியும் மிகவும் பிரபலம் தான்.
********
என்ன தான் இப்போது எத்தனையோ இருசக்கர வாகனங்கள் வந்தாலும், மேலே குறிப்பிட்ட வர்த்தக சின்னங்களுக்கு நம் மனதில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.

நீங்கள் ஏதாவது ஒரு வர்த்தக சின்னத்தை அதிகமாக வரைந்ததுண்டா? நான் வரைந்ததுண்டு.. அதன் பெயர் 7ல் ஆரம்பிக்கும்.. அடுத்த பதிவில்..

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்..
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

21 comments:

jothi said...

என்ன செந்தில், ஒரே கலக்கல்ஸ்தான் போல இருக்கு,.. இப்படி வருசையா நச் நச்ன்னு போட்டுக்கிட்டே இருந்தா நாங்கெல்லாம் என்ன பண்றது,.. போங்கப்பா மனுசனுக்கு தாவு தீர்ந்துடுது,.. யூத்புல் விகடம் முழுசா நீங்கதான்,.. ம்ம் என்ன சந்தேகம்? இதுவும் வந்துரும்,.. நாளைக்கு லீவோ??

நாங்கூட தமிழிஸ்ல ஒன்னு போட்டேன், அது லிஸ்ட்ல கூட வர்ல??? ஆங்கிலத்தில் இருந்தால் விடமாட்டாங்களோ??

கோபிநாத் said...

\இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்..\\

குத்திட்டோம்ல்ல ;))

தல - சூப்பர் கொசுவத்தி பதிவு...அப்படியே வண்டியில போறது மாதிரியே இருக்கு.

\\"ஹமாரா பஜாஜ்\\

இவுங்களோட விளம்பரங்களையும் பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

சிதம்பரம் said...

அருமை. கோல்கேட் பவுடர் விட்டுட்டீங்க செந்தில்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
jothi said...
என்ன செந்தில், ஒரே கலக்கல்ஸ்தான் போல இருக்கு,.. இப்படி வருசையா நச் நச்ன்னு போட்டுக்கிட்டே இருந்தா நாங்கெல்லாம் என்ன பண்றது,.. போங்கப்பா மனுசனுக்கு தாவு தீர்ந்துடுது,.. யூத்புல் விகடம் முழுசா நீங்கதான்,.. ம்ம் என்ன சந்தேகம்? இதுவும் வந்துரும்,.. நாளைக்கு லீவோ??
//

வாங்க ஜோதி.. உங்களோட பேராதரவிற்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோபிநாத் said...
\இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்..\\

குத்திட்டோம்ல்ல ;))

தல - சூப்பர் கொசுவத்தி பதிவு...அப்படியே வண்டியில போறது மாதிரியே இருக்கு.

\\"ஹமாரா பஜாஜ்\\

இவுங்களோட விளம்பரங்களையும் பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.
//
வாங்க கோபி. ஆனா இது வேற மாதிரி கொசுவர்த்தி!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
chidambaram said...
அருமை. கோல்கேட் பவுடர் விட்டுட்டீங்க செந்தில்...
//
வாங்க சிதம்பரம்... Colgate இன்னும் நம்ம வீடுகளில் இருக்கிறது தானே?

Anonymous said...

Athu ...Fido - 7-up thaane?

Also, few others

Vicks - aatukuttikitta onaai sollicham - ad..

Nirma - washing power nirma...kutti bommai -ad

REgal - sottu neelam doi...

Ujala - nan ujalakku maariteen

புருனோ Bruno said...

மலரும் நினைவுகள்

--

அது சரி

பஜாஜ் சேதக் வண்டிக்கி சேதக் என்ற பெயர் எதனால் வைத்தார்கள் தெரியுமா

புருனோ Bruno said...

http://en.wikipedia.org/wiki/Bajaj_Chetak

http://en.wikipedia.org/wiki/Chetak_(horse)

Unknown said...

romba nalla irruku senthil

ஈரோடு கதிர் said...

எப்படி தலைவா.... இப்படி கலக்கறீங்க...

என்ன என்னவோ நினைவிற்கு வருகிறது..

எங்க தோட்டத்துக்கு வந்த சொந்தக்காரரோட யெஸ்டிய எடுத்துட்டு போயி சேத்து வயல் விழுந்தது

இன்னைக்கு யெஸ்டி பைக்கையே பார்க்க முடிவதில்லை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க புருனோ... நீங்கள் கொடுத்த தொடுப்பு நன்றாக இருந்தது.

வாங்க அனானி நண்பரே..

வாங்க பிரதீப்.. ரொம்ப நாளாச்சு..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கதிர் said...
எப்படி தலைவா.... இப்படி கலக்கறீங்க...

என்ன என்னவோ நினைவிற்கு வருகிறது..

எங்க தோட்டத்துக்கு வந்த சொந்தக்காரரோட யெஸ்டிய எடுத்துட்டு போயி சேத்து வயல் விழுந்தது

இன்னைக்கு யெஸ்டி பைக்கையே பார்க்க முடிவதில்லை
//

வாங்க கதிர்.. யெஸ்டி எல்லாம் இப்ப பாக்கறதே அரிதாத்தான் இருக்கு..

அது ஒரு கனாக் காலம் said...

நல்லா யோசிச்சு .... ( ரூம் போட்டு ), எழுதிஇருக்கீங்க ... நல்லா வந்துருக்கு, பழைய நினைவுகள் ஒரு புது கோணத்தில்

Suresh said...

:-) Nice memories Nice Post thalai

sakthi said...

அருமை செந்தில்

ரொம்ப யோசித்து பதிவிடுகின்றீர்கள்

ஸ்ரீ.... said...

நினைத்து மகிழும் வகையில் இருக்கிறது இடுகை. ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....

குசும்பன் said...

எங்க மாமாக்கிட்ட ஒரு வண்டி இருந்துச்சு பேரு லேம்பி காலேஜ் படிச்ச பொழுது கூட அதை ஓட்டி இருக்கிறேன்:))

அருமையான மலரும் நினைவு!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
அது ஒரு கனாக் காலம் said...
நல்லா யோசிச்சு .... ( ரூம் போட்டு ), எழுதிஇருக்கீங்க ... நல்லா வந்துருக்கு, பழைய நினைவுகள் ஒரு புது கோணத்தில்
//
வாங்க தல.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//
Suresh said...
:-) Nice memories Nice Post thalai
//
வாங்க சுரேஷ்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
sakthi said...
அருமை செந்தில்

ரொம்ப யோசித்து பதிவிடுகின்றீர்கள்
//
வாங்க சக்தி.. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

//
ஸ்ரீ.... said...
நினைத்து மகிழும் வகையில் இருக்கிறது இடுகை. ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

ஸ்ரீ....
//
வாங்க ஸ்ரீ... உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
குசும்பன் said...
எங்க மாமாக்கிட்ட ஒரு வண்டி இருந்துச்சு பேரு லேம்பி காலேஜ் படிச்ச பொழுது கூட அதை ஓட்டி இருக்கிறேன்:))

அருமையான மலரும் நினைவு!
//

வாங்க தல.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Related Posts with Thumbnails