Sunday, July 19, 2009

தின்னறது ஒருத்தன் காசழுவறது வேறொருத்தன்! இதுவும் பச்சைப் பேச்சு தான் மச்சி!

நீங்க அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கறீங்க.

அந்தக் குடியிருப்பில் பலர் ஒன்றோ இரண்டோ கார்களை வைத்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளோர் கார்கள் வைத்திருப்பதைப் பார்த்து உங்களுக்கும் கார் வாங்கும் ஆசை வருகிறது.

அடுத்த நாள் குடியிருப்புச் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒரு அறிவிப்பு, "நமது அடுக்குமாடிக் குடியிருப்பில் கார்கள் நிறுத்த இடமில்லாததால், புதிதாக கார்களை வாங்குவோர் வெளியில் தான் நிறுத்த வேண்டும்" என்று.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

பலர் ஒன்றிற்கும் மேலான கார்கள் வைத்திருக்கும் போது என் காரை நிறுத்த இடமில்லையா?

அண்மையில் நடைபெற்ற ஜி-8 மாநாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான நிலை தான் மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக் காட்டு.

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளை பல கார்களை வைத்திருப்போருடன் ஒப்பிடலாம். இந்தியா, சீனா, பிராசில் போன்ற வளரும்நாடுகளை கார் வாங்க விருப்பமுள்ளோருடன் ஒப்பிடலாம்.

உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதும், வெப்ப வாயுக்களின் தாக்கத்தால் பூமியின் தட்பவெப்பம் அதிகரித்து வருவதும் நாம் அறிந்ததே. திடீரென்று புயலும் வெள்ளமும் வருவதும், மழையே பெய்யாத இடங்களில் மழையும், வடதுருவத்தில் பனி உருகுவதுமாக இயற்கையில் சீற்றத்திற்கு இந்த சுற்றுச்சூழல் மாசடைவதே காரணம். சென்ற நூற்றாண்டில் பூமியில் தட்பவெப்பம் சராசரியாக ஒரு டிகிரி அதிகமாகயுள்ளது.

பூமியில் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற ஆலோசிக்க நடைபெற்றது தான் ஜி-8 மாநாடு!

இதில் வளர்ந்த நாடுகள் "எல்லா நாடுகளும் வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்" என்று அறிவித்தது. தொழில் முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றம் நேரடியாக வெப்ப வாயுக்களுடன் தொடர்புடையது நாம் அறிந்ததே! வளர்ந்த நாடுகள், சென்ற நூற்றாண்டு முழுவதும் போதுமான அளவு இயற்கை வளங்களை அழித்துவிட்டு இப்போது சட்டமிடுவதை இந்தியா போன்ற நாடுகள் வரவேற்கவில்லை!

இந்தியரின் சராசரி வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை விட அமெரிக்கரின் வெளியேற்றம் 30 மடங்கு அதிகமாம். இந்த இடத்தில் அனைத்து நாடுகளுக்கும் ஒரே அளவு என்ற திட்டத்தைக் கொண்டு வருவது, தின்னது ஒருத்தன் காசழுவறது வேறொருத்தன் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

இந்த நிலை உலக அரங்கில் மட்டும் தானா? இந்தியாவில் எப்படி உள்ளது?
உதாரணத்திற்கு மின்சாரத் தேவையை எடுத்துக்கொள்வோம்..
சென்னை போன்ற பெருநகரின் மின்சாரத் தேவை தமிழக கிராமங்களின் மொத்த மின்சாரத் தேவையை விட அதிகமாம்!

முன்பு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருந்த இடத்தில் இப்போது இரண்டு. காத்தாடி மட்டும் போதும் என்ற நிலை மாறி குளிர்பதனப்பெட்டி (AC) இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை! இப்படியே நமது தேவை பெருகிக் கொண்டே செல்கிறது!
கீழே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

*நீங்கள் அலைபேசி மின்னூட்டியின் (Charger ) இணைப்பைத் துண்டிக்க மறந்ததுண்டா?
*வீட்டை விட்டு வெளியே வரும்போது காத்தாடி, குழல் விளக்கு போன்றவற்றை செயல்பாட்டில் விடுவதுண்டா?
*உங்கள் மின் சாதனங்களை Stand-by நிலையில் வைப்பதுண்டா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் "சுற்றுச்சூழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று யோசிப்பது நல்லது!

நம் வீட்டில், A/Cயின் பயன்பாட்டை ஒரு மணி நேரம் குறைத்துக் கொண்டாலே கிராம வீட்டின் ஒரு நாள் மின்சாரத்தேவையைப் நிறைவேற்ற முடியுமாம்.

சென்னை போன்ற நகரவாசிகளின் அதிகப்படியான மின்சாரப் பயன்பாட்டால் கிராமங்களில் மின்வெட்டு வந்தால், கிராமவாசிகளும் தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்?
சிந்திப்போமா?

பச்சைப் பேச்சு தொடரும்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

28 comments:

jothi said...

36 பதிவில் 21 பதிவுகள் விகடனில் என்றால் சும்மாவா? உங்களின் மெனக்கெடலுக்கும், விடாமுயற்சியுடன் தமிழில் கவனம் செலுத்துவதற்கான ஆதாரங்கள் அவை. தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்,..

jothi said...

// சென்னை போன்ற நகரவாசிகளின் அதிகப்படியான மின்சாரப் பயன்பாட்டால் கிராமங்களில் மின்வெட்டு வந்தால், கிராமவாசிகளும் தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்? //

நெத்தியடி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜோதி.. உங்கள் ஆதரவிற்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

அருமையான இடுகை நண்பரே.. வாழ்த்துகள்

sakthi said...

யோசிக்கவைக்கும் பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

சொல்லவந்த விஷயத்தை இவ்வளவு எளிமையாகக்கூட சொல்ல முடியுமா??

அழகு :)

நாமக்கல் சிபி said...

//குளிர்பதனப்பெட்டி (AC) //

நீங்க ரொம்ப புழுக்கமா இருந்தா இந்த குளிர்பதனப்பெட்டி ல போயி தங்கிடுவீங்களா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
இராகவன் நைஜிரியா said...
அருமையான இடுகை நண்பரே.. வாழ்த்துகள்
//

வாங்க இராகவன் சார், உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
sakthi said...
யோசிக்கவைக்கும் பதிவு
//

வாங்க சக்தி...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
எம்.எம்.அப்துல்லா said...
சொல்லவந்த விஷயத்தை இவ்வளவு எளிமையாகக்கூட சொல்ல முடியுமா??

அழகு :)
//

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
நாமக்கல் சிபி said...
//குளிர்பதனப்பெட்டி (AC) //

நீங்க ரொம்ப புழுக்கமா இருந்தா இந்த குளிர்பதனப்பெட்டி ல போயி தங்கிடுவீங்களா?
//

வாங்க நாமக்கல் சிபி.. வருகைக்கு நன்றி

Suresh Kumar said...

தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்? /////////////////////////

அருமையான கேள்வி நல்ல பதிவு

சென்ஷி said...

அசத்தல் பதிவு நண்பரே!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
Suresh Kumar said...
தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்? /////////////////////////

அருமையான கேள்வி நல்ல பதிவு
//
வாங்க சுரேஷ்...

//
சென்ஷி said...
அசத்தல் பதிவு நண்பரே!
//

வாங்க சென்ஷி..

geethappriyan said...

நண்பர் செந்தில்வேலன்
மின்சாரம் ரொம்ப ஒரு அறிய வச்த்துங்க நம்ம இந்தியாவுல.
குறிப்பா தமிழ்நாட்டுல..
வீட்டுக்கு ஒரு எ/க என்ற நிலைமை போய் ௨ எ/க பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஒரு நாளைக்கு மட்டும் ஆறு மணிநேரம் மின் தடை ,(கண்ட நேரங்களில்)
இதற்கு சூரிய சக்தி தாங்க மாற்று வழி..

நீங்க சொன்ன படி நடந்துகொள்வதாலும்
ஹீட்டர் போட்டு உடனே அடுத்தடுத்து ஆள் குளிப்பது.
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நீறேர்ருவது.
பழைய மின் உபகரணங்களை மாற்றி
எது மின்சிக்கனம் தருமோ அதை வாங்கி பயன்படுத்தலாம்.
வாஷிங் மெஷினில் துணிகளை வாரம் ஒரு முறை துவைப்பது.
ஹாட் பேக்குகளை ,மைக்ரோவேவுகளை உபயோகித்து
அடிக்கடி கேஸ் அடுப்பு பற்ற வைப்பதை தவிர்க்கலாம்
குப்பைகளை கண்டபடி தூக்கி எரியாமல் (எரிக்காமல்)
தகுந்த முறையில் அப்புறப்படுத்தலாம்.
வழக்கம் போல நல்ல உழைப்பு..வாழ்த்துக்கள்.நேரில் பார்ப்போம்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன்..

நீங்கள் கூறிய அனைத்தும் இன்றைய வாழ்வில் தேவையே!!

வாசகர் கடிதம் said...

////
நாமக்கல் சிபி said...
//குளிர்பதனப்பெட்டி (AC) //

நீங்க ரொம்ப புழுக்கமா இருந்தா இந்த குளிர்பதனப்பெட்டி ல போயி தங்கிடுவீங்களா?
//

வாங்க நாமக்கல் சிபி.. வருகைக்கு நன்றி//

அசத்தலான கேள்வி பதில்கள்! வாழ்த்துக்கள்!

நாகா said...

//சென்னை போன்ற நகரவாசிகளின் அதிகப்படியான மின்சாரப் பயன்பாட்டால் கிராமங்களில் மின்வெட்டு வந்தால், கிராமவாசிகளும் தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்?//

இனறைய நகர வாசிகளில் பெரும்பாலும் ஒரு காலத்தில் கிராமவாசிகளே. மின் சாதனப் பொருட்களின் தேவை உயர்ந்துவிட்ட இக்காலத்தில், கார்த்திகேயன் கூறியது போல் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் சரியான வழி

ஈரோடு கதிர் said...

செந்தில்... மிகச்சரியான கேள்விதான்... மின்சாரத்தின் அருமை மின்சாராம் போன நடு இரவுகளில் தெரியும், ஆனால் மின்சாரம் திரும்ப வந்த சில நிமிடங்களிலேயே அதன் அருமையும் மறந்து போய்விடுகிறது.

அர்த்தம் மிகுந்த பதிவு

வினோத் கெளதம் said...

செந்தில் தரமான பதிவு..நான் இதைப்பற்றி அடிக்கடி சிந்தித்து இருக்கிறேன்..

Cable சங்கர் said...

அருமையான தெளிவான பதிவு.. ந்ண்பரே.. வாழ்த்துக்கள்.

SUBBU said...

சும்மா நச்சின்னு இருக்கு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
நாகா said...
இனறைய நகர வாசிகளில் பெரும்பாலும் ஒரு காலத்தில் கிராமவாசிகளே. மின் சாதனப் பொருட்களின் தேவை உயர்ந்துவிட்ட இக்காலத்தில், கார்த்திகேயன் கூறியது போல் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் சரியான வழி
//

வாங்க நாகா... நீங்க சொல்ற மாதிரி மாத்தி யோசிக்கனும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கதிர் said...
செந்தில்... மிகச்சரியான கேள்விதான்... மின்சாரத்தின் அருமை மின்சாராம் போன நடு இரவுகளில் தெரியும், ஆனால் மின்சாரம் திரும்ப வந்த சில நிமிடங்களிலேயே அதன் அருமையும் மறந்து போய்விடுகிறது.

அர்த்தம் மிகுந்த பதிவு
//

வாங்க கதிர். உண்மை தாங்க... நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வினோத்கெளதம் said...
செந்தில் தரமான பதிவு..நான் இதைப்பற்றி அடிக்கடி சிந்தித்து இருக்கிறேன்..

//
வாங்க வினோத்.. இது யோசிக்க வேண்டிய விசயமுங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
Cable Sankar said...
அருமையான தெளிவான பதிவு.. ந்ண்பரே.. வாழ்த்துக்கள்.
//

வாங்க சங்கர், முதல் தடவையா வந்திருக்கீங்க.. வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
SUBBU said...
சும்மா நச்சின்னு இருக்கு
//
வாங்க சுப்பு.. வருகைக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//*நீங்கள் அலைபேசி மின்னூட்டியின் (Charger ) இணைப்பைத் துண்டிக்க மறந்ததுண்டா?
*வீட்டை விட்டு வெளியே வரும்போது காத்தாடி, குழல் விளக்கு போன்றவற்றை செயல்பாட்டில் விடுவதுண்டா?
*உங்கள் மின் சாதனங்களை Stand-by நிலையில் வைப்பதுண்டா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் "சுற்றுச்சூழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று யோசிப்பது நல்லது!//

சரியான அவசியமா கேட்க்க வேண்டிய கேள்வி......

Related Posts with Thumbnails