Monday, July 13, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 9

நம் பேருந்துகளில் "புகைப் பிடிக்காதீர்" என்று எழுதியிருப்பார்கள்.
அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!
ஆனால் "கை பிடி" என்பதற்கும் "கைப் பிடி" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
"கை பிடி" என்றால் கையைப் பிடி என்றும், "கைப் பிடி" என்றால் பேருந்தில் வரும் கைப்பிடியையும் உணர்த்தும்.
******
அலைகடல் என்பதற்கும் அலைக்கடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். "அலைகடல்" என்றால் அலைகின்ற கடலையும் "அலைக்கடல்" என்றால் அலையை உடைய கடல் என்றும் பொருள்படும்.
*****
நம் திருமண அழைப்பிதழ்களில் திருவளர்ச்செல்வி என்று அச்சிடுவதைக் காண முடியும். இது தவறு. செல்வம் சிறக்கும் செல்வியாக என்றென்றும் இருக்கவேண்டும் என்றால் திருவளர்செல்வி என்றே எழுத வேண்டும்.
********
நான் ஒரு பதிவோ கட்டுரையோ எழுதும் பொழுது, எனக்கு வரும் ஐயங்களில் சந்திக்குத் தான் முதலிடம். ( இந்தப் பதிவில் எத்தனை பிழை உள்ளதோ?). படிக்கும் பொழுது தமிழில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுதும் போது பிழை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
நாம் சொல்ல வரும் கருத்தைச் சரியாக எழுத நமக்கு சந்தியைப் பற்றிய அறிவு மிகவும் தேவை. ஆகவே ஒரு இலக்கண நூல் நம் கையில் இருப்பதும் தமிழில் எழுத மிகவும் உதவும்.
*********
எத்தனை எத்துணை என்ன வேறுபாடு?
எண்ணிக்கையைக் குறிக்கும் இடத்தில் "எத்தனை" என்ற சொல்லையும், எண்ணிக்கையில்லாத அளவு, குணம், நிறம், போன்றவற்றைக் குறிக்கும் போது "எத்துணைப் பெரியது", "எத்துணைச் சிவப்பு" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
********
அன்று - அல்ல பயன்படுத்துவது எப்படி?
அஃது உண்மை அன்று
அவை உண்மை அல்ல
இவற்றில் அன்று என்பதை ஒருமைக்கும் அல்ல என்பதை பன்மைக்கும் பயன்படுத்துவது முறையாகும்.
********
கீழே இணைத்துள்ளது நான் கூகுள் வேவைப் பற்றி எழுதிய பதிவின் ஒரு பத்தி..

"நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)"

இதில், சாட் (chat), டைப் (type), கமெண்ட் ( Comment ) என்று ஆங்கில சொற்களைத் தமிழில் எழுதியிருப்பேன். அந்த சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன என்று தெரியாதது தான் காரணம். இது போல ஐயங்களைத் தீர்க்க நமது பயன்பாட்டில் உள்ள சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கில சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...
Backspace - பின் நகர்வு
Backup - காப்பு
Bar Code - பட்டைக் குறிமுறை
Boot - தொடங்குதல்
Bottleneck - இடர்
Bug - பிழை
Bypass - புறவழி
Calibration - அளவீடு செய்தல்
Capacity - கொள்திறன்.
Cancel - நீக்கு
Cartridge - பெட்டகம்
Certification - சான்றளிப்பு
Channel - தடம்
Character - உரு
Charge - மின்னூட்டம்
Chat - உரையாடு
Check out - சரிபார்த்து அனுப்பு, சரி பார்
Chip - சில்லு
Chop - நீக்கு
Clip Board - பிடிப்புப் பலகை
Clone - நகலி
Coding - குறிமுறையாக்கம்
Coherence - ஓரியல்பு
Collector - திரட்டி
Concatenate - தொகு
Command - கட்டளை
Communication - தொடர்பு
Compile - தொகு
Condition - நிபந்தனை
Configure - உருவாக்கு
Contrast - வேறுபாடு
Copy - நகல்
Counter - எண்ணி
Crash - முறிவு
Credit Card - கடனட்டை
Cursor - சுட்டி
Customize - தனிப்பயனாக்கு
Cut and Paste - வெட்டி ஒட்டு
Cycle - சுழற்சி.
Data - தரவு
.
நமது பயன்பாட்டில் உள்ள பிற தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொற்கள் அடுத்த பதிவில்..

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

17 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சரி வாக்களித்துவிட்டேன்

கலையரசன் said...

தகவல் தொழில்நுட்பத்துறை தகவல்கள் நன்று செந்தில்..
புதிய வார்த்தைகளை கற்றுகொண்டோம், வளர்க உமது பணி!!

ஓட்டாச்சு!

ஈரோடு கதிர் said...

பயன் மிகுந்த பதிவு

மிக்க நன்றி செந்தில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
சரி வாக்களித்துவிட்டேன்
//
வாங்க சுரேஸ்! வாக்களிப்பிற்கு நன்றி

//
கலையரசன் said...
தகவல் தொழில்நுட்பத்துறை தகவல்கள் நன்று செந்தில்..
புதிய வார்த்தைகளை கற்றுகொண்டோம், வளர்க உமது பணி!!

ஓட்டாச்சு!

//
வாங்க கலை - ஆதரவிற்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...
//அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!//

செந்தில் அம்புட்டு சின்னப் புள்ளையா நீங்கள் ?

தன்னின்பம் என்பதை தரக் குறைவாக 'கை அடித்தல்' என்று சொல்லப்படுகிறது அந்த பொருளில் தான் 'கை பிடிக்காதீர்கள்' என்று எழுதி இருப்பதாக சொல்லுவார்கள். :)

//

வாங்க கோ.வி. கண்ணன்.

இடத்திற்கு இடம் நாம் பயன்படுத்தும் சொற்கள் மாறுபடத்தானே செய்கின்றன. இதில் தரக்குறைவான சொற்களும் அடங்கும்.

நாம் தரக்குறைவான சொற்களை இங்கே விட்டுவிடுவோமே :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...

அவை, இவை ஆகியவற்றில் பன்மைகளான அவைகள், இவைகள் இலக்கணப்படி சரியா ?
அறிந்து கொள்ளக் கேட்கிறேன்
//

அவை, இவை. இந்த சொற்களே அது, இது என்ற சொற்களின் பன்மை தான் என்று நினைக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கதிர் said...
பயன் மிகுந்த பதிவு

மிக்க நன்றி செந்தில்
//

வாங்க கதிர்! வருகைக்கு நன்றி

ரெட்மகி said...

ரொம்ப உபயோகமான தகவல்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழில் கலைச்சொற்கள் பற்றி கேட்டு அறிய

http://groups.google.co.in/group/tamil_wiktionary

என்ற குழுமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்களுக்குத் தமிழில் தெரியாத ஆங்கிலச் சொற்கள் குறித்து கேட்டு அறியலாம்

தகடூர் கோபி(Gopi) said...

செந்தில்,

நல்ல கட்டுரை.

உங்கள் பின்னூட்டப் பெட்டியை உட்சட்டம் (IFRAME)கொண்டு வடிவமைத்திருப்பதால் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் நகல் + ஒட்டு(Copy + Paste) செய்ய இயலவில்லை. கவனித்து சரி செய்யுங்கள்.

கோவி.கண்ணன்,

//அவை, இவை ஆகியவற்றில் பன்மைகளான அவைகள், இவைகள் இலக்கணப்படி சரியா ?//

அது, இது இவற்றின் பன்மையே அவை, இவை (பன்மைகள் என்ற சொல்லில் கூட 'கள்' சேர்ப்பது தவறு என நினைக்கிறேன் :-) )

மேலவை, பேரவை, அரசவை போன்ற 'அவைகள்' குறித்து பேசும் போது அவைகள் என்ற சொல் வரும்.

ஆனால் 'இவைகள்' என்ற சொல் எங்கும் பயன்படுவதாய் தெரியவில்லை.

இந்த அவைகள், இவைகள் சிக்கல் கலைஞர் மு.கருணாநிதியின் "தொல்காப்பியப் பூங்கா" நூலில் கூட பரவலாய் காணப்பட்டது குறித்த ஒரு பழைய மடல் இங்கே

இந்த மடலின் TSCII மூலம் http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7073

ராஜதிருமகன் said...

நல்ல பதிவு செந்தில்வேலன்
www.susenthilkumaran.blogspot.com
www.kavinkavi.blogspot.com
இதுவும் என்னுடைய தளங்கள்தான் பார்த்து உங்க கருத்துகளைச் சொல்லுங்க‌

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ரெட்மகி said...
ரொம்ப உபயோகமான தகவல்
//

வாங்க மகி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ரவிசங்கர் said...
தமிழில் கலைச்சொற்கள் பற்றி கேட்டு அறிய

http://groups.google.co.in/group/tamil_wiktionary

என்ற குழுமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்களுக்குத் தமிழில் தெரியாத ஆங்கிலச் சொற்கள் குறித்து கேட்டு அறியலாம்
//

வாங்க ரவிசங்கர்.. இந்தத் தளத்தைப் பார்க்கிறேன். தங்கள் பரிந்துரைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
தகடூர் கோபி(Gopi) said...
செந்தில்,

நல்ல கட்டுரை.

உங்கள் பின்னூட்டப் பெட்டியை உட்சட்டம் (IFRAME)கொண்டு வடிவமைத்திருப்பதால் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் நகல் + ஒட்டு(Copy + Paste) செய்ய இயலவில்லை. கவனித்து சரி செய்யுங்கள்.

கோவி.கண்ணன்,

//அவை, இவை ஆகியவற்றில் பன்மைகளான அவைகள், இவைகள் இலக்கணப்படி சரியா ?//

அது, இது இவற்றின் பன்மையே அவை, இவை (பன்மைகள் என்ற சொல்லில் கூட 'கள்' சேர்ப்பது தவறு என நினைக்கிறேன் :-) )

மேலவை, பேரவை, அரசவை போன்ற 'அவைகள்' குறித்து பேசும் போது அவைகள் என்ற சொல் வரும்.

ஆனால் 'இவைகள்' என்ற சொல் எங்கும் பயன்படுவதாய் தெரியவில்லை.

இந்த அவைகள், இவைகள் சிக்கல் கலைஞர் மு.கருணாநிதியின் "தொல்காப்பியப் பூங்கா" நூலில் கூட பரவலாய் காணப்பட்டது குறித்த ஒரு பழைய மடல் இங்கே

இந்த மடலின் TSCII மூலம் http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7073
//

வாங்க தகடூர் கோபி.

நல்ல விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி!

நல்ல மடலைப் பரிந்துரை செய்திருக்கிறீர்கள். படித்தேன். மிகவும் பயனுள்ளவை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ராஜதிருமகன் said...
நல்ல பதிவு செந்தில்வேலன்
www.susenthilkumaran.blogspot.com
www.kavinkavi.blogspot.com
இதுவும் என்னுடைய தளங்கள்தான் பார்த்து உங்க கருத்துகளைச் சொல்லுங்க‌
//

வாங்க ராஜதிருமகன்.

கண்டிப்பா பார்க்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//நம் பேருந்துகளில் "புகைப் பிடிக்காதீர்" என்று எழுதியிருப்பார்கள்.
அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!
ஆனால் "கை பிடி" என்பதற்கும் "கைப் பிடி" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
"கை பிடி" என்றால் கையைப் பிடி என்றும், "கைப் பிடி" என்றால் பேருந்தில் வரும் கைப்பிடியையும் உணர்த்தும்.//

நல்ல விளக்கம் செந்தில்///////

TVSUMAN said...

Perumaikaha sollavillai senthil

ithu ilankayil sariyaagave payanpaduthapadukirathu

enakku thamil naatu media kalil payan paduthapadum thamilai paarthu aachariyamum vethanaiyum than varum

Related Posts with Thumbnails