Tuesday, July 7, 2009

பச்சையா பேசலாமா? இது கிரீன் டாக் மச்சி - 2உங்களிடம் ஒரு கேள்வி!

இது வரை நீங்க எத்தனை மரங்கள் நட்டு இருக்கீங்க?

ஒன்று? இரண்டு?..

மரங்களை ஏதாவது ஒரு விழாவின் போதோ அல்லது அலுவலகத்தில் கொடுத்தார்கள் என்றோ நட்டு இருப்பீங்க! அது இன்று எப்படி இருக்கு தெரியுமா? எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் மரங்களை நட்டு, வளர்த்து வந்தால் பாராட்டுகள்!

அடுத்த கேள்வி..

இது வரை நீங்க எத்தனை மரங்களை வெட்டியிருக்கீங்க?

பதிலே வரலியே...

"நாங்க ஏன் மரங்கள வெட்டனும்.. நாங்க எந்த கட்சியைச் சார்ந்தவர்களோ, சமூக விரோதிகளோ கிடையாதே"னு நீங்க சொல்றது கேட்குது.

உண்மையா யோசிச்சு சொல்லுங்க இது வரைக்கு நீங்க, உங்க குடும்பத்தினர் எல்லாம் சேர்ந்து எத்தனை மரங்களை வெட்டியிருக்கீங்க?

சரி, நேரா நம்ம விடயத்திற்கு வருவோம்.

நீங்க உங்க அலுவலகத்துல இருக்கீங்க.. உங்களுக்கு இருமலோ தும்மலோ வருது. நீங்க என்ன செய்வீங்க? உங்க கைக்குட்டையை எடுத்து வாயைப் பொத்துவீங்களா? அல்லது உங்க இருக்கையில் வைத்துள்ள மென்-காகிதத்தை (Tissue Paper ) எடுத்து துடைப்பீர்களா?

கைக்குட்டையா? அதெல்லாம் படிக்கற காலத்தோட மறந்தாச்சுங்க..

ஏன்னா, கைக்குட்டை தூய்மையானது கிடையாது. மென்-காகிதத்தை வைத்துக் கொள்வது தான் நாகரிகமிக்க செயல்!!

இது கூடப் பரவாயில்லை...

சில வருடங்களுக்கு முன்பு வரை, கற்களை வைத்துத் மலத்தைத் துடைத்த நாம், இன்று பயன்படுத்துவது மென்-காகிதத்தைத் தான்! மென்-காகிதம் இல்லாத சலக்கமனையே (கக்கூஸ்) இல்லை என்கிற அளவிற்கு நாம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி வருகிறோம்!

ஏப்பா, தூய்மையா இருக்கறதுக்கு இது தேவை தானே? என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கு முன்பு, மென்-காகிதம் எப்படி உருவாகிறதென்பது தெரியுமா?

இது நூறு சதவிகிதம் மரங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை. நீங்கள் பயன்படுத்தும் மென்-காகிதத்தின் அட்டையில் "Made from 100% Virgin wood pulp" என்று அச்சிட்டிருப்பார்கள். அதாவது நூறு சதவகிதம் மரங்களை வெட்டியே இதனைத் தயாரிக்கிறோம் என்று உறுதிமொழி (??)அளிக்கிறார்கள்.

இப்படி மரங்களை வெட்டித் தயாரிக்கப்படும் மென்-காகிதங்களை வைத்துத் தான் பிட்டத்தைத் (Butt) துடைக்க வேண்டுமா? அல்லது தும்ம வேண்டுமா?பிறகு பூமி சூடாகிறது என்று புலம்புவதால் என்ன பயன்?

ஒரு ஆய்வரிக்கை கூறுவது என்னவென்றால் அதிக திறன் கொண்ட மகிழுந்துகளை (Luxury Cars) பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த மென்-காகிதங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலிற்குத் தீங்கானதாம். நம் ஆயுள் முழுவதும் இந்த வகைக் காகிதங்களை பயன்படுத்துவோம் என்றால் குறைந்தது ஒன்றிரண்டு மரங்களையாவது சாய்த்திருப்போமாம்!!

சரி.. நம்மால் முடிந்தது என்ன?

மென்-காகிதங்களைத் தவிர்த்துவிட்டு கைக்குட்டைகளை பயன்படுத்தலாமே! அழுக்கானால் துவைத்துக் கொள்ளலாம் ( நீங்களா துவைக்கப் போகிறீர்கள்?) வீணாகப் போவதில்லை!! நம்ம தாத்தாவைப் பார்த்தீங்கன்னா, எஜமான் ஸ்டைல்ல தோள்ல துண்டு போட்டிருப்பாங்க!! எதற்காக? வியர்வை, தும்மல் எல்லாம் துடைக்கத்தானே! அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக வாழவில்லையா?

இல்லை, எனக்கு காகிதங்கள் வேண்டும் என்றால் மறுசுழற்சி (Recycle) செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்துங்கள். பூமி உங்களுக்கு நன்றி கூறும்.

மரங்களை நடத்தான் மறுக்கிறோம், குறைத்தது அழிக்காமல் இருக்கலாமே?

பச்சைப் பேச்சு தொடரும்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்!

17 comments:

வினோத்கெளதம் said...

Nalla KOdukkirnga Detailu..:))

தீப்பெட்டி said...

நல்ல விசயம்..

ஆனந்தன் said...

ஒரு காகிதத்துல இவ்வளவு விஷயமா . நான் 20 இதுவரைக்கும் இக்கும் மேற்பட்ட செடிகள் நட்டு வளர்த்து வருகிறேன் . தகவளுக்கு நன்றி நண்பரே

நாகா said...

தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Paperன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் கைமாறாக, நம்மால் இயன்ற வரை மரங்களை நடலாம். தொடருங்கள் தோழரே..

கலையரசன் said...

பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ இல்லையோ...
நான் கூறுகிறேன் நன்றி செந்தில்!
யப்பா.. ரொம்ப நாட்கள் கழித்து
நிறைவான பதிவு படித்த திருப்தி!!

நானும் கைகுட்டைகளை பயன்படுத்த
முயற்சி செய்கிறேன்...

ரெட்மகி said...

நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒருத்தி போல atleast ஒவ்வொருத்தனும் ஒரு மரம் வளர்க்கணும் ....

நாங்க எங்க கிராமத்தில் 50 மரம் நட்டு வளர்த்தோம் , ஆனால் பாழ போன அரசியிலால் ,
ஏரி தூர் வாரரோம்னு சொல்லி ஒரு அடி கூட வாரம ,நாங்க கரைல நட்டு வச்ச அத்தன மரத்தையும் சாக அடிசிட்டானுக .2 வருடம் வளர்த்தோம் எல்லாம் வீண் .அதனால கடந்த 2
வருடமா எந்த மரமும் நடல.

இனி நாங்க மரம் வளர்ப்போம் கண்டிபாக எந்த இடயுறூம் வராமல் ...

நன்றி அண்ணா

Ranjitha said...

Collective Informations.

ச.செந்தில்வேலன் said...

//
வினோத்கெளதம் said...
Nalla KOdukkirnga Detailu..:))
//

வாங்க விணோத்.. முதல்ல கருத்த தெரிவிச்சதுக்கு நன்றி

ச.செந்தில்வேலன் said...

//
தீப்பெட்டி said...
நல்ல விசயம்..
//

//
ஆனந்தன் said...
ஒரு காகிதத்துல இவ்வளவு விஷயமா . நான் 20 இதுவரைக்கும் இக்கும் மேற்பட்ட செடிகள் நட்டு வளர்த்து வருகிறேன் . தகவளுக்கு நன்றி நண்பரே
//

வாங்க தீப்பெட்டி, ஆனந்தன். வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் said...

//
நாகா said...
தற்போதைய வாழ்வுமுறையில் Tissue Paperன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் கைமாறாக, நம்மால் இயன்ற வரை மரங்களை நடலாம். தொடருங்கள் தோழரே..
//

கண்டிப்பா மரங்கள் நட்டே தீர வேண்டும். இல்லையென்றால் உலகமே பாலைவனமாகிவிடும்.

ச.செந்தில்வேலன் said...

//
கலையரசன் said...
பூமி உங்களுக்கு நன்றி கூறுதோ இல்லையோ...
நான் கூறுகிறேன் நன்றி செந்தில்!
யப்பா.. ரொம்ப நாட்கள் கழித்து
நிறைவான பதிவு படித்த திருப்தி!!

நானும் கைகுட்டைகளை பயன்படுத்த
முயற்சி செய்கிறேன்
//

முயற்சி செய்யங்கள் கலை. ஏதோ நம்மால் ஆன சிறு பங்களிப்பு..

ச.செந்தில்வேலன் said...

//
ரெட்மகி said...
நல்ல பதிவு ...ஒருத்தனுக்கு ஒருத்தி போல atleast ஒவ்வொருத்தனும் ஒரு மரம் வளர்க்கணும் ....

நாங்க எங்க கிராமத்தில் 50 மரம் நட்டு வளர்த்தோம் , ஆனால் பாழ போன அரசியிலால் ,
ஏரி தூர் வாரரோம்னு சொல்லி ஒரு அடி கூட வாரம ,நாங்க கரைல நட்டு வச்ச அத்தன மரத்தையும் சாக அடிசிட்டானுக .2 வருடம் வளர்த்தோம் எல்லாம் வீண் .அதனால கடந்த 2
வருடமா எந்த மரமும் நடல.

இனி நாங்க மரம் வளர்ப்போம் கண்டிபாக எந்த இடயுறூம் வராமல் ...

நன்றி அண்ணா
//

வாங்க மகி! உங்க முயற்சி பலனளிக்காமல் போனதிற்கு வருந்துகிறேன்.

இந்த முறை வெற்றியடைய வாழ்த்துகள்

ச.செந்தில்வேலன் said...

//
Ranjitha said...
Collective Informations.
//

வாங்க ரஞ்சிதா... வருகைக்கு நன்றி

Mahesh said...

அட... நல்லா பச்ச பச்சயா பேசறீங்க..

நானும் உடுமலைதான் :)

கோபிநாத் said...

ஆகா...

இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா!!

பகிர்வுக்கு நன்றி தல ;)

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் வேலன்

அருமையான இடுகை - தக்வல்கள் அறிந்தவை எனினும் பயனபடுத்தாத தகவல்கள். என்று இயற்கைக்கு எதிராக மரங்கள் வெட்டுவதும் - பசுமை நிலங்களை அழிப்பதும் - பாசன் வாய்களை மூடுவதும் - இருக்க இடம் தேடி - வாழ வசதியாக இத்தனையும் செய்தோமோ - செய்கிறோமோ - அன்றே நாம் பாவம் செய்ய ஆரம்பித்து விட்டோம்.

என்று இந்த இயற்கைக்கு எதிரான செயலை நிறுத்தப் போகிறோமோ - தெரியவில்லை

நல்வாழ்த்துகள் செந்தில் வேலன்

Joe said...

I'll try to use recycled paper, whenever I do.

Thanks for the information.

Related Posts with Thumbnails