Saturday, July 4, 2009

பச்சையா பேசலாமா? (இது கிரீன்-டாக் மச்சி ) - 1

இன்றைய தேதியில் நம் மத்தியில் அதிகமாக விவாதிக்கும் விடயங்களில் இயற்கைக்கும் சுற்றுப்புறச் சூழலிற்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பற்றித் தான் இங்கே பேசப்போகிறோம்!

நீங்க ஆப்பிள் வாங்க கடைக்குப் போறீங்க! கடையில சீன ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள் என மூனு வகையான ஆப்பிள் விற்கப்படுகிறது. நீங்க எதை வாங்குவீங்க?

விலை அதிமாக இருந்தாலும் அமெரிக்க ஆப்பிள் தான் வாங்குவேன்னு நீங்க சொனீங்கன்னா.. உங்களுக்கு அடுத்த கேள்வி?ஏன்?

உங்க அண்ணன் அமெரிக்கால இருக்கறதாலயா? அல்லது அமெரிக்க ஆப்பிள் பளபளன்னு இருக்கறதாலயா? அல்லது அமெரிக்க ஆப்பிளுக்கு கூடுதல் சுவையா?
உங்களுக்கு அடுத்த கேள்வி.
எந்த ஆப்பிளை வாங்குவதால் நாம் இயற்கைக்கு நன்மை செய்கிறோம்? மூன்று வகையான பதில்கள் கீழே..

கண்டிப்பா அமெரிக்க ஆப்பிள் தான்! ஏன்னா அங்கே தான், ஆப்பிள் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படுகிறது!

சீன ஆப்பிள் தான்! ஏன்னா அங்வே தான், பெருமளவில் வளர்க்கிறாங்க. சத்தும் அதிகமா இருக்கிறது!

காஷ்மீர் ஆப்பிள் தான்! ஏன்னா காஷ்மீர் தான் நம்ம ஊருக்குப் பக்கம் இருக்கிறது. அனைத்து இந்திய நகரத்திற்கும் கொண்டுபோக குறைந்த போக்குவரத்துச் செலவும் நேரமும் தேவைப்படுகிறது!

இதுல எதுங்க சரியான பதில்?

மூன்றாவது பதில் தாங்க சரியானது.

காஷ்மீரைக் காட்டிலும் அமெரிக்காவிலிருந்தோ, சீனாவிலிருந்தோ இந்திய நகரங்களுக்கு ஆப்பிள்களைக் கொண்டு வர அதிக எரிபொருள் செலவாகிறது. அது கடல்வழியாகவோ, வான்வழியாகவோ இருந்தாலும் இயற்கைக்கு மிகவும் தீங்கானதே!

இதனை உணவு தூரம் (FOOD MILES ) என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு பொருள் விலையும் இடத்திலிருந்து விற்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எவ்வளவு தூரம் பயனிக்க வேண்டும், எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்று கணிப்பது தான் இந்த உணவு தூரக் கணக்கு! மேலும், நாம் உட்கொள்ளும் உணவு விலைநிலத்தில் இருந்து நம் வீட்டிற்கு வரும் வரை கெடாமல் இருக்க குளிர்சாதன வசதிகளும் தேவைப்படும்.

இப்படி உணவுவகைகளைப் பதப்படுத்துவதிலும், போக்குவரத்திலும் வெளியேறும் வாயுக்கள் புவியை மேலும் சூடாக்குகின்றன.

ஆக முடிந்த வரை உள்நாட்டுப் பொருட்களையோ அருகாமையில் விளையும் பொருட்களை வாங்குவது கண்டிப்பாக இயற்கைக்கு நன்றிக்கடன் செய்வதாக இருக்கும்.

அதை விடுத்து விலை அதிகமா இருக்கற வெளிநாட்டு ஆப்பிள் தான் தரமானது என்று நினைப்பது சரியா?

என் ஒருவனின் முடிவு இயற்கைக்கு பயனளிக்குமா என்று நினைக்க வேண்டாம். சிறுதுளிகள் தானே பெருவெள்ளம் ஆகிறது!

பச்சைப் பேச்சு தொடரும்....

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...

22 comments:

வினோத் கெளதம் said...

Enga iruthu thaan pidikringa matter..
Tagaval pudusu..

ஆனந்தன் said...

நம்ம ஆளுங்களுக்கு எப்பவும் வெளிநாட்டு பொருட்களின் மீததானே பற்று அதிகம்.அமெரிக்க ஆப்பிள் தான் வாங்குவாங்க.

விரைகள் புதிய தளம் பசுமையை நோக்கி
http://pasumaiulagam.blogspot.com/


அண்ணா நீங்க நம்ம ஊரு தானா ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வினோத்கெளதம் said...
Enga iruthu thaan pidikringa matter..
Tagaval pudusu..

//

வாங்க வினோத்.. புதுசோ பழசோ நல்லா இருந்தா சரி தானே?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ஆனந்தன் said...
நம்ம ஆளுங்களுக்கு எப்பவும் வெளிநாட்டு பொருட்களின் மீததானே பற்று அதிகம்.அமெரிக்க ஆப்பிள் தான் வாங்குவாங்க.

விரைகள் புதிய தளம் பசுமையை நோக்கி
http://pasumaiulagam.blogspot.com/


அண்ணா நீங்க நம்ம ஊரு தானா ?
//

வாங்க ஆனந்தன்.. பசுமை செய்திகளைப் பரப்புவது நல்லது..

நமக்கும் உங்க ஊர்பக்கம் தான்..

நாகா said...

மேலும் ஆப்பிள்கள் பல நாட்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு போன்ற இரசாயனம் ஒன்றைத் தடவுகின்றனர். நேற்று நம் சென்னையில் கூட செயற்கை முறையில் ஏதோ இரசாயனங்களைத் தடவி மாம்பழங்களைப் பழுக்க வைத்த சில வியாபாரிகளைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பூச்சி மருந்துகள், மற்றும் இரசாயனங்களின் பயன்பாடுகளும் தற்போதைய விவசாயத்தில் மிகவும் பெருகி விட்டது.. மற்றுமொரு அருமையான தொடர், தொடருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நண்பா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
நாகா said...
மேலும் ஆப்பிள்கள் பல நாட்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு போன்ற இரசாயனம் ஒன்றைத் தடவுகின்றனர். நேற்று நம் சென்னையில் கூட செயற்கை முறையில் ஏதோ இரசாயனங்களைத் தடவி மாம்பழங்களைப் பழுக்க வைத்த சில வியாபாரிகளைக் காவல்துறை கைது செய்துள்ளது.
//

வாங்க நாகா... நீங்க சொல்றது உண்மை தான்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ஆ.ஞானசேகரன் said...
நல்ல பகிர்வு நண்பா
//

வருகைக்கு நன்றி நண்பரே

Thomas Ruban said...

ஆப்பிள்கள் பல நாட்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு போன்ற இரசாயனம் ஒன்றைத் தடவுகின்றனர் எனவே தோல் சீவி விட்டு சாப்பிடுங்கள்.

jothi said...

//ஆப்பிள்கள் பல நாட்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு போன்ற இரசாயனம் ஒன்றைத் தடவுகின்றனர் எனவே தோல் சீவி விட்டு சாப்பிடுங்கள்.//

நானும்கூட இதற்கு ஒத்து போகிறேன். ஆப்பிள் நீண்ட நாள் வருவதற்கும், கெட்டு போகாமல் இருப்பதற்கும் ஆப்பிளின் மேற்பகுதியில் wax (a hydro carbon) தடவப்படுகிறது. ஆனால் பெரும்பாலான் சத்துகள் தோலில் இருப்பது நம் துரதிர்ஷ்டம். அதனால் எங்கோ எப்படியோ விளையும் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் நமக்கு தெரிந்து வரும் காய்கறிகளை சாப்பிடுவது சால சிறந்தது/ பொதுவாக கண்ணை கவரும் நிறத்துடன் இருக்கும் காய் கறிகளையும் பழங்களையும் தவிர்ப்பது நல்லது (உதாரணம் ரத்த சிவப்பாய் இருக்கும் தக்காளி, நாவல் பழ நிறத்தில் இருக்கும் கோஸ்), காரணம் கவரும் வகையில் இருப்பதற்காக பழங்கள் முன்பே உயிர் செயற்கை (bio-artificial) முறையில் வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன.

ராஜதிருமகன் said...

நல்ல பதிவு செந்தில்வேலன் . மனசில பதிக்கப்பட வேண்டிய பதிவு இப்படிக்கு இனிப்பு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//

Thomas Ruban said...
ஆப்பிள்கள் பல நாட்கள் பளபளப்பாக இருக்க அதன் மேல் மெழுகு போன்ற இரசாயனம் ஒன்றைத் தடவுகின்றனர் எனவே தோல் சீவி விட்டு சாப்பிடுங்கள்
//

சரியாக சொன்னீர்கள் ரூபன்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

jothi said...

//எங்கோ எப்படியோ விளையும் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் நமக்கு தெரிந்து வரும் காய்கறிகளை சாப்பிடுவது சால சிறந்தது/ பொதுவாக கண்ணை கவரும் நிறத்துடன் இருக்கும் காய் கறிகளையும் பழங்களையும் தவிர்ப்பது நல்லது (உதாரணம் ரத்த சிவப்பாய் இருக்கும் தக்காளி, நாவல் பழ நிறத்தில் இருக்கும் கோஸ்), காரணம் கவரும் வகையில் இருப்பதற்காக பழங்கள் முன்பே உயிர் செயற்கை (bio-artificial) முறையில் வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன//

அன்பரே, மிக அழகாக பல செய்திகளை விளக்கியுள்ளீர்.. அருமை.

கலையரசன் said...

சிகப்பான ஆப்பிளை வைச்சு, பச்சையா பேசிட்டீங்க!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ராஜதிருமகன் said...
நல்ல பதிவு செந்தில்வேலன் . மனசில பதிக்கப்பட வேண்டிய பதிவு இப்படிக்கு இனிப்பு
//
வாங்க திருமகன்.. வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கலையரசன் said...
சிகப்பான ஆப்பிளை வைச்சு, பச்சையா பேசிட்டீங்க!!
//

வாங்க கலை.. வருகைக்கு நன்றி!

Babu (பாபு நடராஜன்} said...

குப்புற படுத்து யோசிக்கிறாங்க....டோய்....

SUFFIX said...

ஆப்பிள வச்சு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி, அசத்திட்டீங்க!!

ராஜதிருமகன் said...

அலோ செந்தில்வேலன் சார்..
என் வலைப்பூவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுட்டா எப்படி ? என்னபழக்கம் இது? ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம்போடுங்க . நல்லா இல்லன்னா கன்னா பின்னான்னு திட்டுங்க.எனக்கு கணிப்பொறி அறிவு கம்மி . அங்க இங்கன்னு போயி விளம்பரப்படுத்தத் தெரியாது . அந்த சுவாதியும் பதிலே சொல்லமாட்டேங்குறாங்க.இனி நீங்க எப்பஇனிப்பு சாப்பிட்டாலும் உங்களுக்கு இனிப்பு ஞாபகம் வரணும் .

ராஜதிருமகன் said...

அதாங்க www.inippu.blogspot.com

Admin said...

உங்கள் பதிவுகள் அருமை....

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

cheena (சீனா) said...

அன்பின் செந்தில் வேலன்

புதிய தகவலுக்கு நன்றி

பச்சையாப் பேசலாமுன்னு சொல்லிட்டு - அதுவும் கிரீன் டாக் மச்சின்னு சொல்லிட்டு - சிவப்பு சிவப்பா பேசறீங்களே ! நாயமா

நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails