Tuesday, July 28, 2009

அய்ய்ய்ய்! கூகுள்!!

நாம் வழக்கமாக எதற்கெல்லாம் இணையத்தைப் பயன்படுத்துகிறோம்?

மின்னஞ்சல் அனுப்ப - பெற, செய்திகளைத் தெரிந்து கொள்ள, நண்பர்களுடன் உரையாட (சாட் செய்ய ), ஏதாவது தகவலைத் தேட, படங்கள் மற்றும் காணொளியைப் பார்க்க போன்றவற்றிற்காகப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் வலைப்பதிவர்கள் என்றால், பின்னூட்டம் வந்துள்ளதா என்பதை மின்னஞ்சலில் தெரிந்து கொள்ள, நாம் தொடரும் (ஃபாலோ) வலைத்தளங்களில் ஏதாவது புதிய பதிவுகள் வந்துள்ளதா என்பதைப் பார்க்க, மற்றும் பதிவுகளில் பின்னூட்டம் இட... என்று சொல்லலாம்.

இவை அனைத்தையும் நாம் எப்படி செய்கிறோம்?

* ஜி-மெயிலிற்கு ஒரு சாளரம் ( விண்டோ )
* செய்திகளைப் பார்க்க ஒரு சாளரம்
* தகவல்களைத் தேட ஒரு சாளரம்
* பின்னூட்டம் இட "அழகி" போன்ற மென்பொருளையோ ஜி-மெயிலையோ பயன்படுத்துகிறோம்.
* நாம் தொடரும் வலைத்தளங்களில் புதிய பதிவுகள் வந்துள்ளதா என்பதைப் பார்க்க ஒரு சாளரம்..

வீட்டில் இருக்கிறோம் என்றால் இத்தனை சாளரங்களைத் திறந்து வைப்பது சாத்தியம். ஆனால், நாம் அலுவலகத்தில் இருக்கிறோம் என்றால் என்ன செய்வது? நம்மில் பெரும்பாலானோர் பின்னூட்டங்களையும், பதிவுகளையும் படிப்பது அலுவத்தில் தான் என்பது வேறு விடயம் :)

இது போல பல சேவைகளை அளிப்பதே ஐ-கூகுளின் வேலை!! ஒரே ஒரு சாளரம் மட்டும் திறந்து வைத்தால் போதும்!

எப்படி?
வழக்கம் போல கூகுள் தளத்திற்குச் செல்லவும். அங்கே ஐ-கூகுளில் தொடுப்பை அழுத்தவும். பிறகு உங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தி உள்ளே செல்லவும்.

நீங்கள் கீழே பார்ப்பது எனது ஐ-கூகுள் வாசலைத்தான்! நான் என்னென்ன சேவைகளைச் (விட்ஜட் ) சேர்த்துள்ளேன்?

1. தேடுதளம் 2. செய்திகள் தமிழில் 3. தமிழில் எழுதும் சேவை 4. ஜி-மெயில் மின்னஞ்சல் 6. கூகுள் ரீடர் 7. கூகுள் சாட் 8. எகனாமிக் டைம்ஸ் செய்திகள் 9. பார்க்க வேண்டிய இடங்கள் 10. வானிலை 11. சி.என்.என். செய்திகள் 12. யூ-டியூப் 13. நேரம்

5. இந்த இடத்தில் சொடுக்கினால் உங்களுக்கு வேறு என்ன சேவைகள் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

(படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கவும்)


உங்கள் "படிப்பவை பட்டியலில்" (ரீடர்) இருந்து படிக்க ரீடர் (6) என்ற தொடுப்பை சொடுக்கினால் போதும், கீழே உள்ளது போல ஒரு பட்டியல் வந்துவிடும். நீங்கள் விரும்பும் பதிவர் என்றால் அங்கே சென்று மீ த பஸ்ட் சொல்ல வேண்டியது தான் :))


ஐ-கூகுளில் வாசலை உங்கள் தேவைக்கேட்ப வண்ணமயமாக்கலாம்..இயற்கை, ஓவியங்கள், நகரங்கள் என ஏகப்பட்ட வடிவங்கள் உள்ளன.உங்கள் உலக சினிமாக் கனவுக் கன்னிகள் படம் வேண்டும் என்றாலும் ஐ-கூகுளில் உள்ளது.


என்ன சொல்கிறீர்கள்? இந்த ஒரு தளம் போதும் தானே! நமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய!!

நீங்கள் ஐ-கூகுளை ஏற்கனவே பயன்படுத்துபவராக இருந்தால் மேலும் என்னென்ன சேவைகள் உள்ளன என்று கூறுங்கள். உங்களுக்கு இது புதிதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்.

27 comments:

கோபிநாத் said...

ஆகா...தகவலுக்கு நன்றி தல ;)

நாகா said...

நல்ல தகவல் செந்தில்..

சென்ஷி said...

சூப்பர்! தேவையான பதிவு தல... மிக்க நன்றிகள்!

மின்னுது மின்னல் said...

நல்லாயிருக்கு..

மின்னுது மின்னல் said...

அப்புறம் மி த ஃபஸ்ட்டுக்கு ரிப்பிட்டேய் போட முடியாது :)

idhyam said...

நல்ல குறள். அதை ஒரே வரியில் இல்லாமல் குறள் போல வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ஒரே வரியில் இருக்கும் குரலை

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என கொடுத்தால் குறள் போல ஆகிவிடும். மிகவும் நன்றாக இருக்கும்.

"நம்மைச் சுற்றி நடப்பவற்றை பதிவு செய்யும் முயற்சி தான் இந்த பக்கங்கள்" நல்ல வாசகம்.

☀நான் ஆதவன்☀ said...

//ஆகா...தகவலுக்கு நன்றி தல ;)//

ரிப்பீட்ட்டு

கதிர், ஈரோடு said...

மிகுந்த பயனுள்ள பதிவு..

நன்றி செந்தில்

ச.செந்தில்வேலன் said...

நன்றி கோபி

நன்றி நாகா

நன்றி சென்ஷி

வாங்க மின்னல். நன்றி

ச.செந்தில்வேலன் said...

வாங்க இதயம். முதன்முறையா நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்க.. நன்றி

ச.செந்தில்வேலன் said...

வாங்க ஆதவன்.. நன்றி

வாங்க கதிர்.. பேர மாத்தீட்டீங்க போல

என் பக்கம் said...

எப்படி இப்படி

கலகிட்டே இருக்கீங்க.

Anonymous said...

உபயோகமான தகவல். ஆனால் நான் நீங்க திறக்குற அளவுக்கு சாளரம்லாம் திறக்கறதே இல்லைங்க :-)

கலையரசன் said...

சூப்பர்... செந்தில்!

தமிழ் வார்த்தைகள், பசுமை புரட்சி, டெக்னிக்கல் பதிவுன்னு பொளந்து கட்டுற...

அமீரக குட் ஃபிளாக் ஆகிட்டடா நீ! வாழ்த்துக்கள்!!

ச.செந்தில்வேலன் said...

//
ஆசிப் மீரான் said...
உபயோகமான தகவல். ஆனால் நான் நீங்க திறக்குற அளவுக்கு சாளரம்லாம் திறக்கறதே இல்லைங்க :-)
//

வாங்க அண்ணாச்சி. எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் நம்மள விட அதிகமான சாளரங்கள் பயன்படுத்தறாங்க :))

ச.செந்தில்வேலன் said...

//
கலையரசன் said...
சூப்பர்... செந்தில்!

தமிழ் வார்த்தைகள், பசுமை புரட்சி, டெக்னிக்கல் பதிவுன்னு பொளந்து கட்டுற...

அமீரக குட் ஃபிளாக் ஆகிட்டடா நீ! வாழ்த்துக்கள்!!
//

வாங்க கலை.. கலையிஸத்த காட்டறீங்க பாருங்க.. :))

நட்புடன் ஜமால் said...

தகவலுக்கு நன்றிங்கோ ...

cheena (சீனா) said...

தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

செந்திலின் பக்கங்கள் - தள வடிவமைப்பு நன்றாக இருக்கிறது

வாக்களிக்கப்பட்டது

மற்ற இடுகைகளையும் படிக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

நல்ல பயனுள்ள தகவல் தந்ததற்கு ரொம்ப நன்றி.

நம்மில் பெரும்பாலானோர் பின்னூட்டங்களையும், பதிவுகளையும் படிப்பது அலுவத்தில் தான் என்பது வேறு விடயம் :)

நான் இல்லை நான் இல்லை (எ.கு.இ.)

ச.செந்தில்வேலன் said...

வாங்க ஜமால்

வாங்க நவாசுதீன். நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க போல :))

ச.செந்தில்வேலன் said...

//
cheena (சீனா) said...
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

செந்திலின் பக்கங்கள் - தள வடிவமைப்பு நன்றாக இருக்கிறது

வாக்களிக்கப்பட்டது

மற்ற இடுகைகளையும் படிக்கிறேன்
//

வாங்க சீனா,

நம்ம இடத்திற்கு முதன்முறையா வர்றீங்க போல :) தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் நன்றி

Suresh Kumar said...

நல்ல தகவல்

அன்புடன் அருணா said...

வாவ்! சூப்பர்!ஐ கூக்ள்!

ச.செந்தில்வேலன் said...

வாங்க சுரேஷ் வருகைக்கு நன்றி

வாங்க அருணா வருகைக்கு நன்றி

jothi said...

நல்ல பதிவு செந்தில், நான் இனி மேல்தான் முயற்சி செய்யணும்,. தமிழிஷ் என்ன ஆச்சு?

ச.செந்தில்வேலன் said...

வாங்க ஜோதி. தமிழிஷ் ஆபீசுக்கு லீவு விட்டிருக்காங்கோவ்

அய்யனார் said...

தகவலுக்கு நன்றி செந்தில்

Related Posts with Thumbnails