லெஹர் 7அப் (1992 - ... ), மேங்கோ ஃப்ரூட்டி (1970s - ... ),ஜெம்ஸ் ( 1968 - ... ),நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...)கேம்லின் ( 1931 - ...),ஹீரோ பேனா (1968 - ... ), பிரில் ( 1964 - ..... ), நடராஜ் பென்சில் (1958 - ..)
************************************************************************************
வர்த்தகச் சின்னங்கள் ( பிராண்ட்ஸ்) என்றால் நாம் சிந்திப்பது ஆப்பிள், சாம்சங்க், பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்களின் சின்னங்களைத் தான்.
இந்த அளவிற்குப் பெரிய நிறுவனங்களின் பொருட்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றின் மதிப்பு மட்டும் குறைவதே இல்லை.
அந்த வரிசையில் நாம் காணப்போகும் வர்த்தகச் சின்னங்கள் கீழே..
கேம்லின் ( 1931 - ....... )
கணிதத்தில் வரும் வடிவியல் (ஜியாமெட்ரி) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கேம்லின் தான். எத்தனையோ வர்த்தகச் சின்னங்கள் வந்தாலும் கேம்லினிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.

ஹீரோ பேனா - (1968 - ... ):
இன்றைய தேதியில் சீனத் தயாரிப்பு என்றாலே போலியாக இருக்குமோ, தரக்குறைவான பொருளோ என்று பயப்படுகிறோம். ஆனால் ஒரு பொருள் "மே-இன்-சீனா" என்றால் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இருந்தது என்றால் அது கட்டாயமாக ஹீரோ பேனாவாகத்தான் இருக்கும்.

********
பிரில் - ( 1964 - ..... ):
பிரில் - ( 1964 - ..... ):
பேனாவைப் பற்றிக் கூறிவிட்டு அதில் ஊற்றும் மையைப் பற்றிக் கூறவில்லை என்றால் நன்றாகவா இருக்கும்?
*********

இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.
கேட்பரீஸின் எக்ளைர்ஸ், டைரி மில்க் போன்ற மிட்டாய் வகைகள் விலை அதிகமானதால், நியூட்ரின் இனிப்பு வகைகள் எளியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தது.
நடராஜ் பென்சில் - (1958 - .....) :
தூர்தர்சன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும், "மூன்று பென்சில்களுக்கான ஓட்டப்பந்தயம் அது, மற்ற பென்சில்களின் முனை உடைந்து விடும், நடராஜ் மற்றும் முன்னேறி வெற்றியடையும்"

இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
********
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )
பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.

ஆசை படம் வந்த நேரத்தில் இருந்து இதே நிறுவனத்தின் ஆசை மிட்டாயும் வெகுவாகப் பிரபலமடைந்திருந்தது.
********
ஜெம்ஸ் ( 1968 - .... )
"ஒரு சிறுவன் மைதானத்தில் மட்டையைப் பிடித்துக்கொண்டு இருப்பான். இன்னொரு சிறுவன் பந்தை வீச அது நேராக சிறுவனின் வாயில் போய் விழும். பார்த்தால் அவன் வீசியது ஜெம்ஸ் மிட்டாயை....". தூர்தர்சன் காலத்தில் பார்த்த அழகான விளம்பரம் இது.

கண்ணைக் கவரும் நிறத்தில் வருவதால், குழந்தைகள் மத்தியில் ஜெம்ஸிற்கு ஒரு தனி இடம் தான்.
********
லெஹர் 7அப் - (1992 - ... )
லெஹர் 7அப் - (1992 - ... )
நீங்கள் ஏதாவது ஒரு வர்த்தகச் சின்னத்தை விரும்பி வரைந்ததுண்டா? நான் வரைந்ததுண்டு. 7அப் விளம்பரத்தில் வரும் பிடோ-டிடோ பொம்மையை.

கோல்டு-ஸ்பாட், டொரினோ, தம்ஸ்-அப் போன்ற நிறுவனங்களை வாங்கிய பன்னாட்டு நிறுவனம் எதுவென்று தெரியுமா?
**********
மேங்கோ ஃப்ரூட்டி - (1970s - ....... )
மாஸா, ஸ்லைஸ் போன்ற வர்த்தகச்சின்னங்கள் வருவதற்கு முன்பிருந்தே மாம்பழ ருசியுள்ள குளிர்பானம் என்றால் அது ஃப்ரூட்டி தான். கடும்போட்டியை சமாளித்து இன்றும் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...
20 comments:
ம்ம்ம்ம்ம்ம்ம் நடத்துங்க
//கோல்டு-ஸ்பாட், டொரினோ, தம்ஸ்-அப் போன்ற நிறுவனங்களை வாங்கிய பன்னாட்டு நிறுவனம் எதுவென்று தெரியுமா?//
வாங்கியதே சமாதி கட்டத்தான் என்பது தெரியும்
அருமை ...............
ஆகா.. பழைய நினைவுகளை கிளறி விடுறதுல நீதான்யா முதல் இடம்!
எங்கிருந்துதான் யோசிக்கிரியோ? சூப்பர் மச்சி!!
அந்த சாக்கிலேட் மட்டும் எனக்கு தெரியாம பூடுச்சு
:-(
நல்ல சிந்தனை...பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியிருந்தீர்...கலக்குங்க..
நண்பர்கள் சொன்னா மாதிரி, ..ரூம் போட்டு தான் யோசிக்கீரங்க காளிமார்க் வின்சென்டுன்னு ஒரு பானம் இருந்தது.. சில வகை பிச்கோத்துகளும் சொல்லலாம்னு நினைக்கிறேன் .. பிரிட்டானியா .. நாளா இருக்குது பதிவு
கலக்கல் ;)
வாங்க ஜோதி...
வாங்க சுரேஷ்
வாங்க கீழை ராஸா.. வருகைக்கு நன்றி
வாங்க பிரதீப்.. தங்கள் கருத்திற்கு நன்றி
//
கலையரசன் said...
ஆகா.. பழைய நினைவுகளை கிளறி விடுறதுல நீதான்யா முதல் இடம்!
எங்கிருந்துதான் யோசிக்கிரியோ? சூப்பர் மச்சி!!
அந்த சாக்கிலேட் மட்டும் எனக்கு தெரியாம பூடுச்சு
:-(
//
வாங்க கலை.. அந்த மிட்டாய எப்படி மறந்தீங்க?
அண்ணே இதெல்லாம் பாத்து எவ்ளோ நாளாச்சு நினைவூட்டியதுக்கு ஸ்பெசல் நன்றிங்கோ
//அது ஒரு கனாக் காலம் said...
நண்பர்கள் சொன்னா மாதிரி, ..ரூம் போட்டு தான் யோசிக்கீரங்க காளிமார்க் வின்சென்டுன்னு ஒரு பானம் இருந்தது.. சில வகை பிச்கோத்துகளும் சொல்லலாம்னு நினைக்கிறேன் .. பிரிட்டானியா .. நாளா இருக்குது பதிவு
//
வாங்க தலை.. உங்க தளத்துல எத்தன கொசுவத்தி சுத்தியிருக்கீங்க.. நாம வேற மாதிரி முயற்சி பண்றோம்.. அவ்வளவு தான் :))
நான் சின்ன வயதில் யூஸ் பண்ண ஹீரோ பேனா இப்போ எங்கே .. ம் ம் ம் இப்பல்லாம் பேனாவே யூஸ் பண்ரதில்லேனே..
//
கோபிநாத் said...
கலக்கல் ;)
//
வாங்க கோபி..
//
சூரியன் said...
அண்ணே இதெல்லாம் பாத்து எவ்ளோ நாளாச்சு நினைவூட்டியதுக்கு ஸ்பெசல் நன்றிங்கோ
//
வாங்க சூரியன்.. இத நினைவூட்டத்தான பதிவு போட்டிருக்கோம் :))
//கோல்டு-ஸ்பாட், டொரினோ, தம்ஸ்-அப் போன்ற நிறுவனங்களை வாங்கிய பன்னாட்டு நிறுவனம் எதுவென்று தெரியுமா?//
சொல்லுங்க பாஸ், தெரிஞ்சுக்கிறோம்
எங்கிருந்து புடிக்கறீங்க செந்தில்?? கெளப்புங்க...
///கோல்டு-ஸ்பாட், டொரினோ, தம்ஸ்-அப் போன்ற நிறுவனங்களை வாங்கிய பன்னாட்டு நிறுவனம் எதுவென்று தெரியுமா?//
//
pepsi
ஏ.வி.எம்.லோகோ..கூட மறக்க முடியாத வர்தக சின்னம் செந்தில்
Super..
வாங்க புருனோ... கேபிள் சங்கர் கூறிய நிறுவனம் தான் அந்த மூன்று நிறுவனங்களையும் வாங்கியது.
வாங்க கேபிள் சங்கர். தங்கள் கருத்திற்கு நன்றி
//
நாகா said...
எங்கிருந்து புடிக்கறீங்க செந்தில்?? கெளப்புங்க...
//
வாங்க நாகா.. அப்படியே புடிக்க வேண்டியது தான் :))
//வினோத்கெளதம் said...
Super..
//
வாங்க வினோத்
விருது கொடுத்து இருக்கிறேன் நம் பக்கம் வரவும்..
Post a Comment