அண்மையில் தமிழ்ப் பதிவுலகைக் கலக்கிய (??) சக்தியைப் பாராட்டவும் அமீரகத்தில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்து நாளாகியுள்ளதாலும் ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார் "ஆசீஃப் மீரான் அண்ணாச்சி"! அமீரகத்தில் பெரும்பாலானோர்க்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்திருந்ததால், ஞாயிறன்று சந்திப்பு என முடிவு செய்யப்பட்டது.
வெள்ளி, சனி இரண்டு நாட்களும் கடுமையான புழுதிக் காற்று இருந்ததால் சந்திப்பு எவ்வாறு நிகழும் என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஞாயிறன்று புழுதி அடங்கி இதமான காற்று வீச ஆரம்பித்தும், 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்த தட்பவெப்பமும் 35 டிகிரியாகக் குறைந்ததும் "அமீரக சந்திப்பு இயற்கைக்கும் தெரிந்திருக்கிறதோ" என்று எண்ணத் தோன்றியது. சந்திப்பு நிகழவிருந்த கராமா தமிழ்ப்பதிவர் பூங்காவும் மக்கள் நெருக்கடி இல்லாமல் அமைதியாகவே காட்சியளித்தது.
6 மணிக்கு தொடங்க வேண்டிய சந்திப்பிற்கு கார்த்திகேயனும், அடியேனும் சென்றடைந்தது 5:30 மணிக்கு. ஆக பின்னூட்ட மொழியில் "வீ த ஃபஸ்ட் :)". சில நிமிடங்களில் கலையரசன், 'வடையுடன்' வினோத்கௌதம், சுந்தர் ராமன், நாகா ஆகியோரும் வந்தடைந்தனர். வந்தவுடனே அனைவரது பேச்சும் ஓரிரு நாட்களாக வலையுலகைக் கலக்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஆப்பு, ஆப்பரசன் ஆகியோரைப் பற்றித் தான். சில நிமிடங்களில் ஆசாத், சுபைர் இருவரும் தமிழ் நூல்களுடன் வந்தனர். ( அட, இது அரட்டை அரங்கம் மட்டும் இல்லப்பா...)

"வடை சூடாறுவதற்கு முன்பு அனைவரும் வந்தால் பரவாயில்லையே" என்று கலை சொல்வதற்குள் ஒரு சலசலப்பு! தூரத்தில் ஷார்ஜா சிங்கங்கள் சென்ஷி, ஆதவன், கோபிநாத் ஆகியோர் வந்தடைந்தனர். "எங்கப்பா, இரண்டு நாளா பின்னூட்டத்துல கும்மியே சிரிக்க வச்ச குசும்பனக் காணாம்"னு சென்ஷி சொல்றதுக்குள்ள அண்ணாச்சி, "குசும்பன்" சரவணன், அய்யனார் மற்றும் வாசிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் வந்தடைந்தனர்.

சூடாகிக் கிடந்த வலையுலகை சிரிப்புக் (சிந்தனைக்) கடலில் ஆழ்த்திய சக்திக்குப் பாராட்டைத் தெரிவித்துவிட்டு, பின்னூட்டத்திலேயே வயித்துவலி வரவழைத்த குசும்பனை வடைவிருந்தைத் துவக்க அழைத்தோம். இனிதே வடைவிருந்து ஆர்ம்பிக்க, பதிவர்கள் கணேஷ், சாருகேசி, கிளியனூர் இஸ்மத், வானலை வளர்தமிழ் நண்பர்கள் திருச்சி சையது, மற்றும் ஓர் அன்பரும், லியோ சுரேஷ் அவர்களும் வந்து சேர கூட்டம் களைகட்டியது.
"இங்க பாருப்பா, ஆப்பு, ஆப்பரசனோட ஐ.பி முகவரி வளைகுடா நாடுகளத்தான் காட்டுதாம். உங்கள்ல யாருப்பா ஆப்பு" என குசும்பன் ஆரம்பிக்க அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தேகமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
"நீங்க ஏன் "ஆப்பு"ஆ இருக்கக் கூடாது"ன்னு சென்ஷி கேட்க, குசும்பன் "ஆஃப்" ஆனார்.

சரி, "டெல் மி எபட் யுவர்செல்ஃப்" என்று அண்ணாச்சி அனைவரிடமும் கேட்க.. ஒவ்வொருத்தராக சொல்ல ஆரம்பித்தனர்.
திடீரென்று, "நீங்க எப்படி பதிவு எழுத ஆரம்பிச்சீங்க"ன்னு கேட்க ஒவ்வொருவரும், நேரம் கிடைக்குது, சும்மா ஜாலிக்குங்கற மாதிரி பதில் சொன்னாங்க. (அப்பாடி ஆப்படிக்க யாரும் வரலை...)
"ஒரு பதிவு எப்படி இருக்கனும்"னு கிளியனூர் இஸ்மத் கேட்க,
அய்யனார் "உங்களுக்கு எது நல்ல விசயம்னு தோனுதோ அத எழுதுங்க.. சும்மா பின்னூட்டத்துக்கோ, தொடருவோர்க்கோ, வலை இதழ்களில் வருவதற்கோ எழுதாதீங்க"ன்னு சிறு சொற்பொழிவாற்றினார்.
"அப்போ ஜனரஞ்சகமா எழுதக் கூடாதா"ன்னு கலை கேட்க
"எழுதுங்க ஆனா ரொம்ப மொக்கை போடாம"ப் பாத்துக்கங்க என்றார். அண்ணாச்சி, "நான் ஒரு மொக்கைப் பதிவர் தான்"னு சொன்னது எல்லாருக்கும் தூக்கி வாரிப்போட்டது :)

இந்த சமயத்தில் பதிவர் சுல்தான் அவரது நண்பருடனும், படகு என்ற பெயரில் பதிவெழுதும் பெண்பதிவருடன் வந்தார்..
புதிய பதிவர்களை நோக்கி, "நீங்க அதிகமாப் பேசாம இருக்கீங்க.. உங்களுக்கு இந்த வலையுலகம் எப்படி இருக்கு"ன்னு அய்யனார் கேட்க, "எங்களுக்கு பிரபல பதிவர்களின் ஊக்கமளிப்பு இல்லை, உங்களைத் தொடர்பு கொள்ளத் தயக்கமா இருக்கு"ங்கற மாதிரியான பதில்கள் வந்தன.
அதற்கு சென்ஷி, குசும்பன், அய்யனார், அண்ணாச்சி அனைவரும், "இங்க பிரபல பதிவர், இளைய பதிவர், நட்சத்திரப் பதிவர் எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒன்னுதான்"னு சொன்னாங்க. ( பார்டா, இது கூட நல்லாயிருக்கே...)
"குழு மனப்பான்மை எல்லாம் இல்லாம அனைவரும் நல்ல பதிவுகளை எழுத வேண்டும்" என்று ஆசிஃப் அண்ணாச்சி கூறும் போது மணி 8:30ஐ நெருங்கியது. ஒவ்வொருவரும் சக பதிவர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு பிரிந்தனர்.
கலந்து கொண்ட அன்பர்கள்:
1) அய்யனார்
2) ஆசாத்
3) ஆசிஃப் மீரான்
4) ஆதவன்
5) கலையரசன்
6) கார்த்திகேயன்
7) கீழை ரஸாக்
8) கிளியனூர் இஸ்மத்
9) கோபிநாத்
10) சரவணன்
11) செந்தில்வேலன்
12) சென்ஷி
13) சுந்தர் ராமன்
14) சுபைர்
15) சுல்தான்
16) நாகா
17) தினேஷ்
19) வாஹித்
18) வினோத் கௌதம்
19) படகு என்ற பெயரில் எழுதும் பெண் பதிவர்
20) சந்திரசேகர்
21) திருச்சி சையது
22) ராஜேந்திரன்
23) லியோ சுரேஷ்
சில துளிகள்:
* மொத்தமாக கலந்து கொண்ட பதிவர்கள் எண்ணிக்கை 19. விடுமுறை மற்றும் இன்னபிற காரணங்களினால் 10 பேர் வரமுடியாமல் போனது. அப்படீன்னா.. அமீரகத்தில் ஏறக்குறைய 30 தமிழ்ப்பதிவர்கள் இருக்கோமுங்கோவ்வ்வ்வ்...
* சிறப்பாக வடைவிருந்திற்கு ஏற்பாடு செய்த சுந்தர்ராமன் அவர்களுக்கு நன்றிகள் பல!
* "சிம்ரன் ஆப்பக்கடை"யின் பெயரை "ஆப்பக்கடை"யாக மாற்றியது சிம்ரன் ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக இருந்தது :(
* 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ராஜேந்திரன் அவர்கள், "இங்கே பதிவர்கள் சந்திப்பு நடப்பதை அறிந்து வந்தேன்" என்று சொன்ன போது வியப்பாக இருந்தது.
வலையுலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசிப்பவர்களையும் இணைக்க வல்லது என்று நினைத்த போது.... "தமிழன்னை தன் குழந்தைகளைச் சென்றிடத்திலெல்லாம் காப்பாள்" என்றே தோன்றியது.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்
42 comments:
அசத்திட்டேள் போங்கோ!...தமிழ்மணத்தில ஓட்டு போட முடியல செந்தில். செக் பண்ணுங்க
"தமிழன்னை தன் குழந்தகளை சென்றிடத்திலெல்லாம் காப்பாள்"
இது..
இது...
இதுகாகதான் உன்னைய பதிவெழுத சொன்னது!
//"எங்களுக்கு பிரபல பதிவர்களின் ஊக்கமளிப்பு இல்லை, உங்களைத் தொடர்பு கொள்ளத் தயக்கமா இருக்கு"//
இதை அல்லெய்ன் கைபுள்ள வினோத்துதான் கேட்டான்னு ஓப்பனா சொல்ல வேன்டியதுதானே!!
மீ த ஃபர்ஸ்டு போடலாமென்றால், கலை முந்திவிட்டார்.
//வலையலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசப்பவர்களையும் இணைக்க வல்லது //
மேலுள்ள வரியில் கவனக்குறைவு செந்தில்.. மற்றபடி எப்போதுபோல் உங்கள் பதிவு.. :)
//
☀நான் ஆதவன்☀ said...
அசத்திட்டேள் போங்கோ!...தமிழ்மணத்தில ஓட்டு போட முடியல செந்தில். செக் பண்ணுங்க
//
வாங்க ஆதவன்..பதிவை இணைக்க முடியவில்லை. நாளை பார்க்க வேண்டும்.
//
கலையரசன் said...
"தமிழன்னை தன் குழந்தகளை சென்றிடத்திலெல்லாம் காப்பாள்"
இது..
இது...
இதுகாகதான் உன்னைய பதிவெழுத சொன்னது!
//
வாங்க கலை.. என்னை எழுதத் தூண்டியதிற்கு நன்றி!
//
கலையரசன் said...
//"எங்களுக்கு பிரபல பதிவர்களின் ஊக்கமளிப்பு இல்லை, உங்களைத் தொடர்பு கொள்ளத் தயக்கமா இருக்கு"//
இதை அல்லெய்ன் கைபுள்ள வினோத்துதான் கேட்டான்னு ஓப்பனா சொல்ல வேன்டியதுதானே!!
//
வினோத் விசயத்த ஏற்கனவே ஆல் இந்தியா ரேடியோல ஒலிபரப்பீட்டாக.. அத நம்ம வேற ஏன் சொல்லனும்னு தான் :)
போட்டோ கமண்ட்ஸ் மற்றும் பதிவு அருமைங்க...
//
நாகா said...
மீ த ஃபர்ஸ்டு போடலாமென்றால், கலை முந்திவிட்டார்.
//வலையலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசப்பவர்களையும் இணைக்க வல்லது //
மேலுள்ள வரியில் கவனக்குறைவு செந்தில்.. மற்றபடி எப்போதுபோல் உங்கள் பதிவு.. :)
//
வாங்க நாகா.. கவனக்குறைவை திருத்திவிட்டேன். நன்றி
தரம் மனம் சுவை இது தான் செந்திலின் பதிவு என்பதற்கு இன்னொரு சான்று ..
போட்டோவில் பெயர் போட்டு அடையாளம் காண்பித்த அன்பு நண்பரே அசத்திடீங்க ....சின்ன விண்ணப்பம்...பெயர் போடும் போது அவங்க பெயரைப்போடுங்க....கீழை ரஸாக் இல்லை...கீழைராசா ...வாழ்த்துக்கள்!
//
கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI said...
போட்டோவில் பெயர் போட்டு அடையாளம் காண்பித்த அன்பு நண்பரே அசத்திடீங்க ....சின்ன விண்ணப்பம்...பெயர் போடும் போது அவங்க பெயரைப்போடுங்க....கீழை ரஸாக் இல்லை...கீழைராசா ...வாழ்த்துக்கள்!
//
வாங்க இஸ்மத்.. தவறுக்கு வருந்திகிறேன். மன்னிக்கவும் கீழை ராசா!
பாக்க பொறாமையா இருக்கு,.. பேசாம தோஹாவிலிருந்து துபாய் வந்திரலாமா???
சென்னையைவிட பெரிய கூட்டமப்பா,..
கலக்குங்க,..
ஆகா....கலக்கல் ;))
ஆதவன் போட்டோ கமெண்ட்ஸ் சூப்பரு ;)
\\வலையுலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசிப்பவர்களையும் இணைக்க வல்லது என்று நினைத்த போது.... "தமிழன்னை தன் குழந்தைகளைச் சென்றிடத்திலெல்லாம் காப்பாள்" என்றே தோன்றியது.\\
சூப்பர் பஞ்ச் ;))
தல
நீங்க ஸ்கூல் படிக்கும் போது என்ன மொத பென்ச்சா!! இம்புட்டு நல்லாவே நோட் பண்ணி எழுதியிருக்கீங்கல்ல அதனால கேட்டேன் ;))
அமீரகப் பதிவர் சந்திப்பு பற்றிய அருமையான தொகுப்புங்க..
தமிழ் மணம், தமிழிஷில் இரண்டிலும் ஒட்டுப் போடாச்சுங்க..
அருமையான பதிவு செந்தில்... சிறப்பான தொகுப்பு... படங்களில் கமெண்ட்ஸ் சூப்பர்
ஓட்டும் போட்டாச்சு
//* "சிம்ரன் ஆப்பக்கடை"யின் பெயரை "ஆப்பக்கடை"யாக மாற்றியது சிம்ரன் ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக இருந்தது :(//
அந்த கோவத்துலதான் கலை ஆப்பரசனா மாறியிருப்பார்ன்னு இப்பவாச்சும் நம்பறீங்களா செந்தில் :))
/கோபிநாத் said...
தல
நீங்க ஸ்கூல் படிக்கும் போது என்ன மொத பென்ச்சா!! இம்புட்டு நல்லாவே நோட் பண்ணி எழுதியிருக்கீங்கல்ல அதனால கேட்டேன் ;))
//
என்ன பேச்சு பேசற.... அவரை நேர்ல பாத்தும் இப்படி கேக்க உனக்கு எம்புட்டு தில்லு இருக்கணும் :)
புடைப்பட கமெண்டுகள் அருமை.. :))
வாழ்த்துக்கள். அடிக்கடி நடத்துங்க. தமிழன்னை அனைவரையும் கட்டாயம் காப்பாள்.
ஸ்ரீ....
நல்ல கவரேஜ்!
போட்டோ கமெண்ட்ஸும் அருமை!
அருமை. நிறைய பேரை தெரிந்து கொண்டேன்.
அமீரகத்தில் 4 வருடம் இருந்து விட்டு தங்களையெல்லாம் சந்திக்காமல் போனது சிறிது வருத்தமே.
நல்ல தொகுப்பு.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நகைச்சுவையும் கைகூடுகிறது.அதிலும் உங்கள் திறமையை காண்பியுங்கள்.
வலையுலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசிப்பவர்களையும் இணைக்க வல்லது என்று நினைத்த போது.... "தமிழன்னை தன் குழந்தைகளைச் சென்றிடத்திலெல்லாம் காப்பாள்"
நிச்சயமாக அது உண்மை என்பது அமீரக மகநாட்டில் காணமுடிந்தது
பகிர்வு அருமை
'டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்'ன்னு ஆங்கிலத்துல அண்ணாச்சி கேட்டார்ன்னு எழுதியிருக்கீகளே..இது நம்புற மாதிரியே இல்லையே? அண்ணாச்சிக்கு இங்கிலிபீசே தெரியாதே?
வடை போச்சா?
சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்
அருமையா விளக்கிருக்கீங்க
படங்களுக்கு வசனம் அருமை.
//
கீழை ராஸா said...
போட்டோ கமண்ட்ஸ் மற்றும் பதிவு அருமைங்க...
//
வாங்க ராஸா.. உங்க பேர தவறா எழுதீட்டேன்.. மன்னிக்கவும்.
//
jothi said...
பாக்க பொறாமையா இருக்கு,.. பேசாம தோஹாவிலிருந்து துபாய் வந்திரலாமா???
சென்னையைவிட பெரிய கூட்டமப்பா,..
கலக்குங்க,..
//
வாங்க ஜோதி.. எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கலாம்..
//
கோபிநாத் said...
தல
நீங்க ஸ்கூல் படிக்கும் போது என்ன மொத பென்ச்சா!! இம்புட்டு நல்லாவே நோட் பண்ணி எழுதியிருக்கீங்கல்ல அதனால கேட்டேன் ;))
//
வாங்க கோபி.. நீங்க கேட்கறதுல ஏதோ உள்குத்தம் இருக்கறமாதிரி தெரியுதே??
//
சென்ஷி said...
//* "சிம்ரன் ஆப்பக்கடை"யின் பெயரை "ஆப்பக்கடை"யாக மாற்றியது சிம்ரன் ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக இருந்தது :(//
அந்த கோவத்துலதான் கலை ஆப்பரசனா மாறியிருப்பார்ன்னு இப்பவாச்சும் நம்பறீங்களா செந்தில் :))
//
அட.. ஆப்பரசன் உருவாக ஆப்பக்கடை காரணமோன்னு குசும்பன் இதத் தான் கேட்டாரோ?
சும்மா சூப்பரா இருக்கு ... நம்ம பக்கம் சக்தி வந்தாச்சுங்க
//
சென்ஷி said...
/கோபிநாத் said...
தல
நீங்க ஸ்கூல் படிக்கும் போது என்ன மொத பென்ச்சா!! இம்புட்டு நல்லாவே நோட் பண்ணி எழுதியிருக்கீங்கல்ல அதனால கேட்டேன் ;))
//
என்ன பேச்சு பேசற.... அவரை நேர்ல பாத்தும் இப்படி கேக்க உனக்கு எம்புட்டு தில்லு இருக்கணும் :)
//
சுருக்கமா "பயம்"னு சொல்லுங்க.. :))
//
இராகவன் நைஜிரியா said...
அமீரகப் பதிவர் சந்திப்பு பற்றிய அருமையான தொகுப்புங்க..
தமிழ் மணம், தமிழிஷில் இரண்டிலும் ஒட்டுப் போடாச்சுங்க..
//
வாங்க ராகவன் அண்ணாச்சி.. குத்துக்கு நன்றி
//
கதிர் said...
அருமையான பதிவு செந்தில்... சிறப்பான தொகுப்பு... படங்களில் கமெண்ட்ஸ் சூப்பர்
ஓட்டும் போட்டாச்சு
//
வாங்க கதிர்..
//
ஸ்ரீ.... said...
வாழ்த்துக்கள். அடிக்கடி நடத்துங்க. தமிழன்னை அனைவரையும் கட்டாயம் காப்பாள்.
ஸ்ரீ....
//
வாங்க ஸ்ரீ
//
குசும்பன் said...
நல்ல கவரேஜ்!
போட்டோ கமெண்ட்ஸும் அருமை!
//
வாங்க தல.. உங்க கிட்ட இருந்து "கமெண்ட்ஸ்"க்கு சொட்டு வருதுன்னா.. நன்றிங்கோவ்..
//
வண்ணத்துபூச்சியார் said...
அருமை. நிறைய பேரை தெரிந்து கொண்டேன்.
அமீரகத்தில் 4 வருடம் இருந்து விட்டு தங்களையெல்லாம் சந்திக்காமல் போனது சிறிது வருத்தமே.
//
வாங்க வண்ணத்துப்பூச்சியார்.. உங்களுக்காகத்தான் இந்தத் தொகுப்பு
//
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
நல்ல தொகுப்பு.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நகைச்சுவையும் கைகூடுகிறது.அதிலும் உங்கள் திறமையை காண்பியுங்கள்.
//
ஆஹா... இது வேறயா :))
//
கரவைக்குரல் said...
வலையுலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசிப்பவர்களையும் இணைக்க வல்லது என்று நினைத்த போது.... "தமிழன்னை தன் குழந்தைகளைச் சென்றிடத்திலெல்லாம் காப்பாள்"
நிச்சயமாக அது உண்மை என்பது அமீரக மகநாட்டில் காணமுடிந்தது
பகிர்வு அருமை
//
வாங்க தினேஷ்.. அது உண்மைதாங்க..
//
ஆசிப் மீரான் said...
'டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்'ன்னு ஆங்கிலத்துல அண்ணாச்சி கேட்டார்ன்னு எழுதியிருக்கீகளே..இது நம்புற மாதிரியே இல்லையே? அண்ணாச்சிக்கு இங்கிலிபீசே தெரியாதே?
//
வாங்க அண்ணாச்சி.. "உங்களப் பத்தி சொல்லங்கடே"ன்னு நீங்க கேட்டதத்தான் அப்படி எழுதினேன்.. :))
//
அபுஅஃப்ஸர் said...
வடை போச்சா?
சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்
அருமையா விளக்கிருக்கீங்க
//
வாங்க அபு.. உங்கள சந்திக்க முடியாமப் போச்சே.. அடுத்த தடவையும் வடை இருக்குங்க..
//
ஜெஸிலா said...
படங்களுக்கு வசனம் அருமை.
//
வாங்க ஜெஸிலா..நன்றி
//
அது ஒரு கனாக் காலம் said...
சும்மா சூப்பரா இருக்கு ... நம்ம பக்கம் சக்தி வந்தாச்சுங்க
//
வாங்க சுந்தர்ராமன் சார்... நானும் வந்திடறேன்..
Post a Comment