Monday, July 27, 2009

குப்பை மேடா நம் நாடு?

காலை எழுந்து உங்கள் வீட்டுக் கதவைத் திறக்கிறீர்கள். ஓர் அதிர்ச்சி! சந்தேகிக்கும் படியாக ஒரு அட்டைப்பெட்டி வீட்டின் முன்பு கிடக்கிறது. என்ன நினைப்பீர்கள்?

யார் அனுப்பி இருப்பார்கள்?

பேசும்படத்தில் கமல் அனுப்பும் அட்டைபெட்டி நினைவிற்கு வருகிறது! ஏதாவது சூனிய வேலையாக இருக்குமோ என்றும் பயப்படுகிறீர்கள். சரி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று திறக்கிறீர்கள்.

அருவருக்கத்தக்க வகையில் வீட்டுக் குப்பை அனைத்தும் அழகாக பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்ன செய்வீர்கள்? காவல் நிலையத்திற்கு செல்வீர்களா அல்லது "யார்டா போட்டது"னு கத்துவீர்களா?

இதுவே அந்த குடியிருப்புப் பகுதியின் பிரபலமானவர் தான் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ஓரிரு நாட்களுக்கு முன்பு பார்த்த செய்தியின் எடுத்துக்காட்டு தான் மேலே குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து பிராசிலிற்கு வந்திறங்கிய கப்பலை சோதனையிட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கப்பல் முழுவதும் இங்கிலாந்தின் கழிவுகள் அடைக்கப்பட்டிந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 1400 டன் அளவிற்கு கழிவுகள் வந்திறங்கியதாம். நம் வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் சேர்த்தால் கூட 200 கிலோவைத் தாண்டாது.
மருத்துவமனைக் கழிவுகள், பயன்படுத்திய ஆணுறைகள், மின்னனுப் பொருள்களின் கழிவுகள், இதர குப்பைகள் என அதில் இருந்தனவாம். இது அனைத்தும் மறுசுழற்சிக்காக என்ற பெயரில் அனுப்பப்பட்டவை. இப்போது பிராசில் நாடு இங்கிலாந்திடம் கண்டனத்தை தெரிவிள்ளதாம்.

இது பிராசிலில் மட்டும் நடப்பதாக எண்ண வேண்டாம்.

இது போல கழிவுகளைக் கொட்டுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும்(??) நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடமாம். அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் இருந்து மறு சுழற்சிக்காக என்ற பெயரில் ஆண்டுதோறும் பெருமளவில் மின்னனுக் கழிவுகள், இதர கழிவுகள் கொட்டப்படுகிறதாம்.

இது போன்ற மின்னனுக் கழிவுகளில் இருந்து பாகங்களை பிரிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது என சேரிப் பகுதியான தாரவி போன்ற இடங்களில் நடக்கிறதாம்.

சென்னைக்கு எப்படி பெருங்குடியோ அது போல வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

இதற்கு என்ன காரணம்?

நம் நாட்டின் சட்டங்களில் இருக்கு ஓட்டை என்று கூறினாலும், வளர்ந்த நாடுகளில் இருக்கும் மின்னனு இயந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு தான் மூலக்காரணம்.

புதிதாக அலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, கணினி என எந்த வகையாக பொருளாக இருந்தாலும் வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை. தற்பொழுது பயன்படுத்தும் பொருளை என்ன செய்வது? பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தான் இப்படி வளரும் நாடுகளை குப்பையாக்குகின்றன.

இந்தப் போக்கு இப்பொழுது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. நாம் குப்பையை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய முடியும்?

* பொருளை குப்பையில் போடுவதற்கு முன்பாக யாருக்காவது தேவையிருக்கிறதா என்று யோசிக்கலாம்.
* ஒலிப்பேழைகள் (CD ) என்றால் பக்கத்தில் இருக்கும் நூலத்திலோ அல்லது நண்பர்களுக்கோ கொடுக்கலாம்.
* மறுசுழற்சிக்கென்று வைத்திருக்கும் இடங்களில் பொருள்களை கொடுக்கலாம்.

சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

20 comments:

Cable சங்கர் said...

நல்ல பயனுள்ளபதிவு செந்தில்

இரவுப்பறவை said...

அருமையான கருத்து...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
Cable Sankar said...
நல்ல பயனுள்ளபதிவு செந்தில்
//
வாங்க சங்கர். வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

//
இரவுப்பறவை said...
அருமையான கருத்து...
//

வாங்க இரவுப்பறவை. வருகைக்கு நன்றி

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல பயனுள்ள பதிவு... செந்தில்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
அது ஒரு கனாக் காலம் said...
நல்ல பயனுள்ள பதிவு... செந்தில்.

//

வாங்க சுந்தர் ராமன் சார். வருகைக்கு நன்றி

வினோத் கெளதம் said...

செந்தில் இதே மாதிரி ஒரு பிரச்னை சமிபத்தில் இந்தியாவில் கூட நடந்தது என்று நினைக்கிறேன்..அதுப்போல் கேரளாவின் மருத்துவ கழிவுகளை அவர்கள் தமிழ்நாடு எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர் என்றும் படித்து நியாபகம்..எதுவாக இருந்தாலும் மறு-சுழற்சி முறை நல்லது தான்..
வழக்கம் போல் நல்ல பதிவு..

butterfly Surya said...

அருமையான பயனுள்ள பதிவு.

கலையரசன் said...

அய்யணார் அடிச்சிடுச்சோ?...

இல்ல... கருத்து செறிவுமிக்க பதிவா போடுறீயே, அதான் கேட்டேன்!!

Jazeela said...

நல்ல பதிவு செந்தில்.

ஈரோடு கதிர் said...

//சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!//

கண்டிப்பாக செயல் படுத்தமுடியும்

ரெட்மகி said...

ஆமா இந்தியன் இளிச்சவாயன்தான்...

கண்டிபா குப்ப போடறதுக்கு முன்னாடி யோசிகணும்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வினோத்கெளதம் said...
செந்தில் இதே மாதிரி ஒரு பிரச்னை சமிபத்தில் இந்தியாவில் கூட நடந்தது என்று நினைக்கிறேன்..அதுப்போல் கேரளாவின் மருத்துவ கழிவுகளை அவர்கள் தமிழ்நாடு எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர் என்றும் படித்து நியாபகம்..எதுவாக இருந்தாலும் மறு-சுழற்சி முறை நல்லது தான்..
வழக்கம் போல் நல்ல பதிவு..
//

வாங்க வினோத். நீங்க சொல்றது சரிதான். இது நம்ம ஊருலயும் நடக்குது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பிரதீப்.

//
வண்ணத்துபூச்சியார் said...
அருமையான பயனுள்ள பதிவு.
//

வாங்க வண்ணத்துப்பூச்சியாரே! தங்கள் பாராட்டிற்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கலையரசன் said...
அய்யணார் அடிச்சிடுச்சோ?...

இல்ல... கருத்து செறிவுமிக்க பதிவா போடுறீயே, அதான் கேட்டேன்!!
//

வாங்க கலை. அய்யனார் அண்ணாச்சியத் தான் கேட்கனும், கருத்து செறிவா இருக்கான்னு :))

//
Jazeela said...
நல்ல பதிவு செந்தில்.
//

வாங்க ஜசீலா, பாராட்டிற்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கதிர் said...
//சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!//

கண்டிப்பாக செயல் படுத்தமுடியும்
//

வாங்க கதிர். நாம முயற்சி செய்தால் நல்லது தானே.

//
ரெட்மகி said...
ஆமா இந்தியன் இளிச்சவாயன்தான்...

கண்டிபா குப்ப போடறதுக்கு முன்னாடி யோசிகணும்..
//

வாங்க ரெட்மகி, கருத்திற்கு நன்றி

jothi said...

நல்ல பதிவு செந்தில்.

கோபிநாத் said...

அட கொடுமையே..!

Prasanna Rajan said...

வளர்ந்த நாடுகள் எப்போதும் வளரும் நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் மேல் எப்போது ஏறி மேயலாம் என்று துடித்து கொண்டிருக்கின்றன. நீங்கள் மேல் சொன்ன பதிவு அதற்கு சரியான உதாரணம். இதற்கு முன் அமெரிக்கா, இந்தியாவிற்கு ஒரு அணுக் கழிவு கப்பலை அனுப்பியதே. மிக நல்ல பதிவு.

அப்படியே எனது வலைத்தளத்திற்கும் வருகை தாருங்களேன்:

http://oliyudayon.blogspot.com

☀நான் ஆதவன்☀ said...

:( நாம தான் இளிச்சவாயன் போல செந்தில்

geethappriyan said...
This comment has been removed by the author.
Related Posts with Thumbnails